25 சதவீத பெண் பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொடுப்பதில் சிக்கல் – மஹிந்த தேசப்பிரிய தெரிவிப்பு

உள்ளூர் அதிகார சபைகளில் 25 சதவீத பெண் பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொடுப்பதில் சிக்கல் நிலவுவதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவுக்கும் இடையில் தேர்தல்கள் ஆணைக்குழுவில் நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. அதன்பின்னர் ஊடகங்களிடம் பேசும்போதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அனைத்து உள்ளூர் அதிகார சபைகளுக்கும் 25 சதவீத பெண் பிரதிநிதித்துவம் கட்டாயமாக்கப்பட்டுள்ள போதிலும்இ உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ள முறைப்படி அது சிக்கலான விடயமாக மாறியுள்ளதென்று அவர் கூறியுள்ளார்.

இதன் மூலம் வெற்றிபெற்ற ஏனைய ஆண் பிரதிநிதிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தப்படுவதாக மேலும் தெரிவித்துள்ளார். இந்த நிலமையின் காரணமாக, குறித்த சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!