தேர்தல் நடாத்த ஜனாதிபதி அழைப்பு விடுத்தால் நாங்கள் ஒத்துழைப்பு வழங்குவோம் – கூட்டு எதிர்க் கட்சி அறிவிப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேர்தல் ஒன்றை நடாத்த அழைப்பு விடுப்பாராயின் அதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க தயாராகவுள்ளதாக கூட்டு எதிர்க் கட்சி தீர்மானித்துள்ளது.

நேற்றிரவு மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளதாக சில ஊடக வட்டாரங்களின் செய்திகளில் இருந்து தெரியவருகின்றது..

பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெறுவதற்கு தேவையான ஒத்துழைப்பை வழங்குவதற்கு கூட்டு எதிர்க் கட்சி நேற்று (13) கூடிய கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!