மு.காவுடன் இணைந்து ஆட்சியமைக்க நாங்கள் தயாரில்லை

– சாய்ந்தமருது சுயேச்சை அணியின் தலைவர் அதிரடி அறிவிப்பு

திகாமடுல்ல மாவட்டத்தில் கல்முனை மாநகர சபைக்கு தோடம்பழ சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிட்ட சுயேச்சை அணி இலக்கம் 4ல் போட்டியிட்டு 9 உறுப்பினர்களை வென்ற அணியை கல்முனை மாநகர சபையில் ஆட்சி அமைக்க வருமாறும் அதற்கு பகரமாக முதல்வர் பதவியை எதுவித நிபந்தனையும் அற்ற முறையில் வழங்குவதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் ஊடகங்கள் மூலமாக நேற்று அழைப்பு விடுத்திருந்தார்.

இவ் அழைப்பை முற்றுமுழுதாக நிராகரிப்பதாக சுயேச்சை அணியின் தலைவர் எம்.எச்.எம். நௌபர் சாய்ந்தமருது மக்கள் பணிமனையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!