நாட்டில் புதுவகை வைரஸ்; சுகாதார அமைச்சு அறிவிப்பு

இன்­பு­ளு­வன்சா ஏ.எச்.1. என். 1 (பன்றி) காய்ச்­ச­லுக்கு சம­மாக மற்­று­மொரு வகை­யான வைரஸ் காய்ச்சல் தற்­போது நாடு முழு­வதும் பரவிக் கொண்­டி­ருப்­ப­தாக சுகா­தார அமைச்சு அறி­வித்­துள்­ளது.

 

சுகா­தார திணைக்­­க­ளத்தில் நேற்று இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பில் கலந்து கொண்­டி­ருந்த உரை­யாற்­றிய போதே சுகா­தாரப் பணிப்­பாளர் நாயகம், விசேட வைத்­தியர் ஜய­சுந்­தர பண்­டார மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில், பன்றி காய்ச்­ச­லுக்கு ஏற்­படும் நோய் அறி­கு­றி­களை ஒத்த வகையில் புது­வ­கை­யான நோய் ஒன்று நாட்டில் பரவி வரு­கின்­றது. இந்த வகை காய்ச்­சலின் ஆரம்ப அறி­கு­றி­யாக தடிமல், இருமல் மற்றும் காய்ச்சல் காணப்­படும். எனினும் இது மர­ணத்தை ஏற்­ப­டுத்தும் நோய் அல்ல என்று கூறிய அவர், ஏற்­க­னவே வேறு நோய்கள் இருப்­போ­ருக்கு இது பர­வினால் மாத்­திரம் மிகவும் ஆபத்­தான நிலை ஏற்­ப­டலாம்.

குழந்­தைகள், கர்ப்­பிணி பெண்கள், வய­தான நபர்கள் மற்றும் நோய்த்­த­டுப்பு சக்தி குறை­வா­ன­வர்கள் இந்த வைரஸ் காய்ச்சல் தொடர்பில் மிகுந்த அவ­தா­னத்­துடன் இருக்க வேண்டும். தற்­போ­தைய நிலை­மையில் இதற்­கான மருத்­துவ வச­திகள் அநே­க­மான வைத்­தி­ய­சா­லை­களில் இருப்­ப­தா­கவும், வீணான பயத்­தையும் பீதி­யையும் ஏற்­ப­டுத்திக் கொள்ள வேண்­டாம்.

நாட்டில் நிகழ்­கின்ற வானிலை மற்றும் கால­நிலை மாற்­றங்­களின் படி இந்த வைரஸ் பர­வு­வதில் மாற்­றங்கள் ஏற்­ப­டலாம். இது தவிர நாட்டில் தற்­போது நில­வு­கின்ற நிலை­மையை நிர்­வ­கிப்­ப­தற்­காக தனிப்பட்ட சுகாதார பாதுகாப்பு தொடர்பில் அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு மக்களிடம் கேட்டுக் கொள்கின்றது என்றார். (வீ)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!