சிந்தித்து எமது வாக்குகளை இட வேண்டும்- அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் திகாமட்டுள்ள மாவட்ட முதன்மை வேடப்பாளர் சட்ட முதுமானி வை.எல்.எஸ்.ஹமீட்

நான் எப்போதும் சமூகத்திற்கு எது நன்மையோ அதற்காய் நான் என்றும் முன் நிற்பேன் மேலும்
கடந்த காலத்தில் சாதாரண ஒருவராய் இருந்து கொண்டு பல சேவைகளை மக்களுக்காய் செய்துள்ளேன் .இந்த பாரளுமன்ற தேர்தல் மிக முக்கியமானது எமது வாக்குகளை சிந்தித்து நாம் வாக்களிக்க வேண்டும்.இத் தேர்தலில் மக்கள் ஒன்று பட்டு வாக்களித்தால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 3 ஆசனங்களை திகாமட்டுள்ள மாவட்டத்தில் கைப்பற்றும் சுழ்நிலை உள்ளது இதற்காக அனைவரும் ஒன்றுபட வேண்டும் .

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கல்முனை மாநகர சபை முன்னாள் வேட்பாளர் யூ. எல்.ஏ.ரகுமான் தலைமையில் இடம்பெற்ற அகில இலங்கை மக்கள் காங்கிரசின் ஸ்தாபக செயலாளரும், திகாமடுள்ள மாவட்டத்தின் முதன்மை வேட்பாளருமான சட்ட முதுமாணி வை.எல்.எஸ் ஹமீட் அவர்களை ஆதரித்து கடந்த செவ்வாய் (23) கல்முனையில்
இடம்பெற்ற ஆதரவாளர்கள் சந்திப்பில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில் கடந்த காலம் நாம் வாக்கிளத்து பாரளுமன்றம் சென்றவர்கள் என்ன சேவைகள் செய்துள்ளார்கள் என்பதை பாருங்கள்

நாம் எதற்காக வாக்களிக்குகிறோம் ?நாம் எதற்காக பிரதிநிதித்துவங்களை தெரிவு செய்கிறோம் என்பதை நாம் சிந்திக்க வேண்டும் .

மேலும் எந்த நிலையிலும் கூட நீங்கள் ஏன் ஆதரவாளரா எந்த கட்சிகாரர் என்று நான் யாரிடம் கேட்ட வரலாறு கிடையாது என்னால் முடிந்த வரை மக்களுக்கு உதவிகளை செய்துள்ளேன் செய்தும் வருகின்றேன் என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!