கல்முனையைச் சேர்ந்தவர் கொரோனாவினால் சவூதியில் மரணம்!

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான இலங்கையரொருவர் சவூதி அரேபியாவில் இன்று (21) ஞாயிற்றுக்கிழமை மரணமாகியுள்ளதாக ஜித்தாவிலுள்ள இலங்கை கொன்சியூலட் ஜெனரல் அலுவலகம் விடியல் இணையத்தளத்திற்கு தெரிவித்ததாக குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

கல்முனை பிரதேசத்தினைச் சேர்ந்த 52 வயதான மீராசாஹிப் அப்துல் ரசீத் என்பவரே கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணமாகியுள்ளதாக கொன்சியூலட் ஜெனரல் அலுவலக பேச்சாளரொருவர் தெரிவித்தார்.

சவூதி அரேபியாவில் சாரதியாக பணியாற்றும் இவர்இ கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி கடந்த 21 நாட்களாக ஜித்தாவிலுள்ள சுலைமான் பகி எனும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே உயிரிழந்துள்ளதாக அவர் கூறினார்.

இவரின் ஜனாஸாவினை அவசரமாக ஜித்தா நகரில் நல்லடக்கம் செய்தவற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் ஜித்தாவிலுள்ள இலங்கை கொன்சியூலட் ஜெனரல் அலுவலகம் மேற்கொண்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!