தொண்டாவின் மக்கள் தொண்டுக்கு அடையாளமாக 1,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும் – அரசுக்கு கோரிக்கை முன்வைக்கிறார் சட்டத்தரணி றிபாஸ்.

நூறுள் ஹுதா உமர்

தோட்டத் தொழிலாளர்களிற்கு விரைவில் 1000 ரூபா சம்பளம் வழங்க வேண்டும். இதுவே மறைந்த அமைச்சர் அமரர் ஆறுமுகன் தொண்டமான் அவர்களின் முக்கிய கோரிக்கையாக இருந்தது. இது தொடர்பில் அவர் பல தடவைகள் அரசை வேண்டியுமுள்ளார். அவர் மரணிக்க சில மணித்தியாலயங்களுக்கு முன்னர் கூட பிரதமர் மஹிந்த ராஜபக்ச அவர்களிடம் இறுதியாக கேட்ட விடயங்களில் இதுதான் முக்கியமானதாக அமைந்திருந்தது என தேசிய காங்கிரஸின் சட்டவிவகார செயலாளர் சட்டத்தரணி ஏ.எல்.எம்.றிபாஸ் தெரிவித்துள்ளார் .

இன்று (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டிருந்த போதே இதனை தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர்,

அவர் காலமாகுவதற்கு முன்னதாக பிரதமரை சந்தித்து பேசிக் கொண்டிருந்ததை பிரதமர் ஊடகங்கள் வாயிலாக குறிப்பிட்டார். தோட்டத் தொழிலாளர்களிற்கு 1,000 ரூபா சம்பளம் வழங்க வேண்டும் என்பதுடன் ஈ.பி.எவ் கொடுப்பனவு பற்றியும் பேசியுள்ளார். இதை பேசி சிறிது நேரத்தின் பின்னர் அவர் உயிரிழந்து விட்டார். எனும் செய்தி துயரம் நிறைந்ததாகவே இந்த நாட்டுக்கும் மலையக உறவுகளுக்கும் அமைந்திருந்தது. அவரது இந்த இரண்டு கோரிக்கைகளையும் விரைவில் நிறைவேற்றி அவர் இந்த நாட்டின் மீதும், மலையக மக்களின் மீதும் கொண்டிருந்த அக்கரைக்கும், கரிசனைக்கும் நாம் மரியாதை செலுத்த வேண்டும்,

எமது நாட்டின் பொருளாதாரத்தை தலை நிமிர்த்தி வைத்திருக்கும் மிகப்பெரும் பொக்கிஷங்களான மலையக தோட்டத்தொழிலாளர்களின் ஊதியம் அவர்களின் உழைப்புக்கு ஏற்றால்போல கடந்தகாலங்களில் இருந்திருக்கவில்லை. கடந்த காலங்களில் போராட்டங்களினால் கிடைக்காத 1000 ரூபா சம்பள போராட்ட வெற்றியை அவர்களின் தலைவரின் உழைப்புக்கான காணிக்கையாக இந்த நாட்டில் அமைய உள்ள புதிய அரசாங்கம் வழங்க முன்வரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!