ICC T-20 World Cup | ஐ.சி.சி முற்றுப்புள்ளி வைப்பு !

அவுஸ்ரேலியாவில் நடைபெறவுள்ள T-20 உலகக் கிண்ண தொடர் ஒத்திவைக்கப்படவுள்ளதாக, பரவலாக பேசப்பட்டுவந்த வந்த நிலையில், இந்த வதந்திக்கு சர்வதேச கிரிக்கெட் சபை முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

இந்த செய்தியானது உண்மைக்கு புறம்பானது என சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி.) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஐ.சி.சி. வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘T-20 உலகக் கிண்ண தொடர் ஒத்திவைக்கப்படுவதாக வெளியாகி வரும் செய்திகள் தவறானது. தொடருக்கான திட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அதேநேரம், வேகமாக பரவிவரும் கொவிட்-19 வைரஸினால், பொதுமக்களுக்கு சுகாதார பிரச்சினைகள் ஏற்படும் என்பதால், தற்காலிக திட்டங்கள் தொடர்பிலும் ஆராயப்பட்டு வருகின்றன’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏழாவது T-20 உலகக்கிண்ண தொடர், எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 18ஆம் திகதி முதல் நவம்பர் 15ஆம் திகதி வரை அவுஸ்ரேலியாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!