மலையகத்தின் அடையாளம் மௌனித்தது. நுவரேலியா மாவட்ட ஐ.தே.க வேட்பாளர் சன்முகம் திருச்செல்வம் அனுதாபம்

மலையகத்தின் அடையாளங்களில் ஒன்றானஅமரர் அறுமுகன் தொண்டமானின் மறைவு இந்தியவம்சாவழிமக்களுக்குபேரழிப்பாகும். மலையகத்தின் சிற்பிஅமரர் சௌமியமூர்த்திதொண்டமானின் பேரானாகப் பிறந்துமலையகமக்களின் நம்பிக்கைநட்சத்திரமாகதிகழ்ந்தஅன்னாரின் பிரிவையிட்டுஎனதுஆழ்ந்தஅனுதாபங்களைதெரிவித்துக் கொள்கிறேன் எனநுவரேலியாமாவட்டஐ.தே.கவேட்பாளர் சன்முகம் திருச்செல்வம் தெரிவிக்கின்றார்.

இதுகுறித்தஅவரதுசெய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது:-
எமதுகுடும்பத்துக்கும் தொண்டமான் ஐயா அவர்களது குடும்பத்துக்குமான உறவு நான்கு தலை முறைகளைச் சார்ந்தது.சிறுவயதுக் காலத்தில் அவருடன் இணைந்து’பிள்ளையார் பந்து’விளையாடியது இன்றும் பசுமரத்துஅணிபோல் நெஞ்சில் நிலைத்திருக்கின்றது.

வாலிபகாலங்களில் அமரர்சௌமியமூர்த்திதொண்டமான் ஐயாவுடன் இணைந்துநாம் இருவரும் அவரிடம் அரசியல்பாடம் கற்றுக்கொண்டமைமறக்கமுடியாதநினைவுகளாகும்.
எந்தவொருபணியைச் செய்யமுனைந்தாலும்அதில் வேகமும் விவேகமும் அதேநேரம் அபாரமாணதுணிவும் கொண்டஒருதொழிற்சங்கஅரசியல் தலைவராகஅமரர் ஆறுமுகன் தொண்டாமான் திகழ்ந்தார்.

மலையகவாழ் தொழிலாளர்; வர்க்கம்தமக்குஎதுநடந்தாலும் தம்மைக்காக்க துணிவுள்ள ஒரு தலைவன் இருக்கின்றார் என்றநம்பிக்கையோடு இருந்துவந்தது. அந்தநிலையில் இன்றுபெரும் தாக்கம் ஏற்பட்டுள்ளது இந்தநிலையைஅன்னாரின் பிரிவுஏற்படுத்தியிருக்கிறது.
இறுதிநிலையிலும் கூட மக்களதுநலனுக்காக இந்தியஉயர் ஸ்தானிகரை சந்தித்துவிட்டுவந்த நிலையில் இந்ததுயரம் சம்பவம் நிகழ்ந்திருப்பதுபெரும் அதிர்ச்சியைஅளித்துள்ளது.
இந்நிலையில் அவரதுபிரிவால்வாடும் குடும்பத்தினர்,தொழிற்சங்கபிரமுகர்கள் மற்றும் அரசியல் சகாக்கள் மற்றும் உற்றார் உறவினர் அனைவருக்கும் எனதுஆழ்ந்தஅனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!