நிவாரண உதவிகளை வழங்குவதில் பாராமுகம் தொடரும் மர்மம் என்ன? நுவரெலியா தொகுதி ஜ.தே.க வேட்பாளர் சன்முகம் திருச்செல்வம் கேள்வி

அம்பன் புயல் காரணமாக ஏற்பட்ட காலநிலை மாற்றமும் தொடர்ந்து ஏற்பட்டுள்ள வளிமண்டல தளம்பல் நிலை காரணமாக ஏற்பட்டுள்ள மாற்றமும் மலையகத்தில் பெரும் பாதிப்பை தொடந்து ஏற்படுத்தி வருகின்றன. எனினும் இதனால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு இது காலவரையில் உரிய முறையில் நிவாரண உதவிகள் கிடைக்கவில்லை. அரச அதிகாரிகள் இது விடயத்தில் பாராமுகம் காட்டுகின்றனரா? இவ்வாறு கேள்வி எழுப்புகின்றார் நுவரெலியா தொகுதி ஜ.தே.க வேட்பாளர் சன்முகம் திருச்செல்வம்(திரு)
இது குறித்த அவரது செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது:-

சமகாலத்தில் பல்வேறு நெருக்கடிகளை மலையகச்சமூகம் சந்தித்து வருகின்றது. குறிப்பாக இயற்கை அனர்த்தம் காரணமாக நுவரெலியா மாவட்டத்தை சேர்ந்த பல பகுதிகள் பாதிக்கப்பட்டு மக்களும் பெரும் இடர்களை எதிர்நோக்கியுள்ளனர்.

அம்பன் புயல் ஏற்பட்டபோது மண்சரிவுகள் இடம்பெற்றன இதன் காரணத்தால் மண் சரிவு அபாயத்தை எதிர்நோக்கிய மக்கள் தமது சொந்த இடங்களை விட்டு இடம் பெயர்ந்து பொது இடங்களில் தங்கவேண்டிய நிர்கதிக்கு ஆளாகினர்.

இவ்வாறு தங்கியவர்களுக்கோ, மண்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கோ உரிய நேரத்தில் அரசின் உதவிகள் கிடைக்கப்பெறவில்லை என விசனங்கள் தெரிவிக் கப்படுகின்றன. அரசுக்கு ஆதரவு வழங்கிநிற்கும் மலையகத் தமிழ் தலைவர்களும் இது குறித்து கூடிய கவனம் செலுத்தவேண்டும் எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி நிவாரணங்கள் கிடைக்க உடன் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

குறிப்பாக இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் போதுமட்டும் மண்சரிவு அபாயம் குறித்து எச்சரிக்கைகள் விடுக்கப்படுகின்றன. எனவே இவை முன்கூட்டி அறியப்பட்ட வையாக இருக்கின்றன என்பது தெளிவாகின்றது.

எனவே அறிந்திருந்தும் அவை குறித்து அவதானம் இன்றிச் செயற்படும் நிலை இருப்பதை நாம் பார்க்கமுடிகிறது. ஆதலால் இவ்வாறு பாதிப்புக்கு உள்ளாகும் நிலையில் உள்ளவர்களுக்கு மாற்று ஏற்பாடுகளை செய்து அவர்களை பாதுகாப் பாக வாழவைக்கும் திட்டங்களை அரசு உடன் அறிமுகம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகிறேன் – என்றுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!