கல்முனையன்ஸ் போரத்தினால் ரமளானில் 3187 பேருக்கு இலவச உணவுப்பொதி விநியோகம்.

(எம்.என்.எம்.அப்ராஸ்)

கல்முனையன்ஸ் போரத்தினால் இரண்டாவது வருடமாக (2020) கல்முனை பிராந்தியத்திலுள்ள அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் நோயாளிகளுடன் தங்கியுள்ளவர்களுக்கும் மற்றும் தூர பிரதேசங்களிலிருந்து கல்முனைக்கு வருகை தந்து வைத்தியசாலைகளில் மற்றும் இதர நிறுவனங்களில் பணிபுரிகிற ஊழியர்கள் புனித நோன்பினை நோக்கும் முகமாக இலவசமாக ஸஹர் உணவு விநியோகிக்கும் செயற்றிட்டத்தினை கல்முனையன்ஸ் போரம் இவ்வருடம் மிக வெற்றிகரமாக நடாத்தி முடித்துள்ளது.

தூர இடங்களிலிருந்து கல்முனை பிராந்தியத்திற்கு பல்வேறுபட்ட தேவைகளுக்காக வருகை தருபவர்கள் புனித நோன்பினை நோற்பதற்கான ஸஹர் உணவை பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமத்தை எதிர்நோக்குவது கல்முனையன்ஸ் போரத்தின் கவனத்திற்கு எட்டப்பட்டதினால் இச்செயற்றிட்டம் கடந்த வருடம்(2019) ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இத்திட்டத்தின் மூலம் இவ்வாண்டு(2020) ரமழான் முழுவதும் மொத்தமாக 3187பேருக்கான உணவு உரிய ஸஹர் நேரத்திற்கு (நோன்பு பிடிக்கும் நேரத்திற்க்கு) பயனாளிகளின் இருப்பிடத்திற்க்கு குழும அங்கத்தவர்கள் மூலம் நேரடியாக சென்று உணவு பொதிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இவ் உணவு விநியோகமானது; கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு 2269 பேருக்கும்,கல்முனை வடக்கு ஆதார வைத்தியாசலைக்கு 112 பேருக்கும்,சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலைக்கு 167பேருக்கும், கல்முனை-டாக்டர் ஜமீல் ஞாபகார்த்த தனியார் வைத்தியசாலைக்கு 173 பேருக்கும், கல்முனை-அஹமட் அலி தனியார் வைத்தியசாலைக்கு264பேருக்கும் , கல்முனை பொலிஸ் நிலையத்திற்கு 39 பேருக்கும் ,பள்ளிவாசல் முஅத்தின்களுக்கு 24 பேருக்கும் ,இதரநிறுவனங்களில் பணிபுரிகிற ஊழியர்களுக்கு 139பேருக்குமாக மொத்தமாக 3187  உணவுப்பொதிகள்  விநியோகிக்கப்பட்டிருக்கிறது.

மேற்படி ஸஹர் உணவானது ரமழான் காலத்தில் மாலை 5:00 மணியிலிருந்து இரவு 8:00 வரைக்கும் தொலைபேசியூடாக கிடைக்கப்பெறும் முன்பதிவுகள் அடிப்படையில் விநியோகிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதே வேளை கடந்த வருடம்  ( 2019)நோன்பினை நோக்க சுமார் 2523 பேருக்கு உணவு பொதிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது .

மேலும் இவ் அமைப்பினால் கோபிட் 19 இடர் நிலையின் போது 1.1 மில்லியன் ரூபா பெறுமதியில் வரிய நிலையில் உள்ள குடுமபங்களுக்கு உலர் உணவு பொதிகள் வழங்கப்பட்டுள்ளதுடன், புனித நோன்பினை முன்னிட்டு பேஸ்ட் புட் மார்கடிங் நிறுவனத்தின் அனுசரணை மூலம் இவ் அமைப்பினால் அம்பாறை மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு 8 தொன் பேரீத்தம்பழம் இலவசமாக விநியோகம் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!