தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரத்னம் ஜீவன் கூலின் செயற்பாடுகள் ஒன்றுக்கொண்டு முரணானது : தே.கா சட்ட, கொள்கை விவகார செயலாளர்  சட்டத்தரணி ஏ.எல்.எம்.றிபாஸ் சாடல் !!  

நூருல் ஹுதா உமர்

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய, பேராசிரியர் ரத்னம் ஜீவன் கூல் அவர்களுக்கு எதிராக நடவடிகை எடுக்கப்போவதாக அறிவித்துள்ளார். அங்கொரு கதை இங்கொரு கதை கதைக்கும் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரத்னம் ஜீவன் கூல் அவர்கள் வேறு ஏதாவது சக்திகளின் அஜந்தாவுக்கு ஏற்றால் போல இயங்குவதாகவே அவரின் நடவடிக்கைகளை பார்க்க முடிகிறது. எவ்வாறாக இருந்தாலும் மக்களின் ஜனநாயக உரிமையான வாக்குரிமை நிலைநிறுத்தப்பட வேண்டும் என  தேசிய காங்கிரசின் சட்ட, கொள்கை விவகார செயலாளர் சட்டத்தரணி ஏ.எல்.எம்.றிபாஸ் தெரிவித்தார்.

இன்று (25) ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரத்னம் ஜீவன் கூல் அவர்கள் தேர்தல்கள் நடத்துவது தொடர்பில் எப்போதும் போன்று இப்போதும் ஒன்றுக்கு ஒன்று முரணான பல கருத்துக்களை தெரிவித்து வருகிறார். பாராளுமன்றம் கலைக்கப்பட்டது செல்லுபடியற்றது என்றும் பொதுத்தேர்தல் ஜூன் 20 நடைபெற தீர்மானிக்கப்பட்டது தொடர்பிலும் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினராக இருந்து கொண்டு சாதாரண ஒருவரை போன்று உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளார்.

இந்த தேர்தல் தொடர்பாக ஆணைக்குழுவின் பரப்புக்கு அப்பால் தேர்தல் ஆணைக்குழுவின் கட்டுப்பாடுகளை மீறி சுயாதீனமாக கருத்துக்களை அவர் தெரிவித்து வருகிறார். இது தொடர்பாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய அவர்களும் பேராசிரியர் ரத்னம் ஜீவன் கூல் அவர்களுக்கு எதிராக நடவடிகை எடுக்கப்போவதாக அறிவித்துள்ளார். அங்கொரு கதை இங்கொரு கதை கதைக்கும் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரத்னம் ஜீவன் கூல் அவர்கள் வேறு ஏதாவது சக்திகளின் அஜந்தாவுக்கு ஏற்றால் போல இயங்குவதாகவே அவரின் நடவடிக்கைகளை பார்க்க முடிகிறது. எவ்வாறாக இருந்தாலும் மக்களின் ஜனநாயக உரிமையான வாக்குரிமை நிலைநிறுத்தப்பட வேண்டும்.

உலகை கொரோனா வைரஸ் தாக்கி அச்சுறுத்திக்கொண்டிருந்த உச்சகட்ட காலத்திலையே தென்கொரிய அரசாங்கம் தேர்தலொன்றை வெற்றிகரமாக நடாத்திமுடித்தது. இந்த வைரசை கட்டுப்படுத்தும் பொறிமுறைகளை அரசாங்கம் சிறப்பாக கையாண்டு மக்களின் ஜனநாயக உரிமைகளையும் பாதுகாக்கும் முகமாக தேர்தலை சிலகாலம் தாமதித்து நடத்த தீர்மானித்துள்ளது. என்றாலும் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து கொரோனாவை அழிக்கும் வரை தேர்தலை நடாத்தாது இருக்க முடியாது. இதற்கிடையில் நாட்டை கொண்டுசெல்ல திறைசேரியிலிருந்து பணத்தை ஒதுக்கீடு செய்வதற்கான சட்ட ஒழுங்குகள் இருப்பதானால் அதுதொடர்பிலான நெருக்கடியையும் அரசு சந்திக்க வேண்டியுள்ளது.

அதே நேரத்தில் அரசியலமைப்பு பேரவையால் நாட்டைப் பாதுகாக்கப் போகிறோம் என கூறி கொண்டு உருவாக்கிய தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்கிடையே உருவாகும் கருத்தியல் வேறுபாடுகளால்  இந்த ஆணைக்குழுவின் தேவைப்பாடுகள் தொடர்பில் சந்தேகம் எழுகிறது. இந்தியா போன்ற நாடுகளில் தேர்தல்கள் பல கட்டங்களாகவும், பல காலப்பகுதிகளில் நடைபெறும் ஆனால் இலங்கை போன்ற சிறிய நாடுகளில் ஒரே நாளில் தேர்தல்கள் நடந்து முடிந்துவிடும் அவ்வாறான சூழ்நிலையில் இவ்வாறான தேர்தல் ஆணைக்குழு தேவையா? என்கின்ற எண்ணப்பாடுகளும் தோற்றம் பெறுகிறது என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!