ரஹ்மத் பவுண்டேஷனின் ‘வீட்டுக்கு வீடு இப்தார்’ நிகழ்வு நற்பிட்டிமுனையில் !!

அபு ஹின்சா

கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் வேண்டுகோளுக்கிணங்க நாடளாவிய ரீதியில் நடைபெற்று வரும் ‘வீட்டுக்கு வீடு இப்தார்’ நிகழ்ச்சி திட்டம் நற்பிட்டிமுனை பிரதேசத்தில் இன்று (21) இடம்பெற்றது.

இந் நிகழ்ச்சி தொடரானது அகில இலங்கை இளம் பெண்கள் முஸ்லிம் சங்கத்தினால் (லுறுஆயு-ளுசுஐடுயுNமுயு ) முன்னேடுக்கப்பட்டு வருகின்றது. அதுமாத்திரமின்றி இவ்வமைப்பினால் பல பாரிய திட்டங்களை வரிய மக்களுக்கு முன்னெடுத்து வருகின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இவ்வைமைப்பிடம் கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன் அமைப்பின் தலைவரும்இ கல்முனை மாநகர சபை பிரதி முதல்வருமான ரஹ்மத் மன்சூர் அவர்கள் வேண்டிக் கொண்டதற்கிணங்க வீட்டுக்கு வீடு இப்தார் என்ற நிகழ்வை நற்பிட்டிமுனை மக்களுக்கும் வழங்கி வைக்கப்பட்டது.

சில தினங்களுக்கு முன்னர் கல்முனை பிரதேசத்திலும் இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது விசேட அம்சமாகும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!