இலங்கை முஸ்லிம்களின் கல்வியில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர் கலாநிதி சுக்ரி – சிலோன் மீடியா போரம்

பேருவளை ஜாமிஆ நளீமியா அரபு கலாபீடத்தின் ஸ்தாபகர் மர்ஹூம் கலாநிதி சுக்ரி அவர்களது இழப்பு முஸ்லிம் சமூகத்திற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும் என சிலோன் மீடியா போரத்தின் தலைவர் றியாத் ஏ.மஜீத் பொதுச் செயலாளர் ஏ.எஸ்.எம்.முஜாஹித் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அனுதாப செய்தியில் தெரிவித்துள்ளனர்.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதானது,

கொடை வள்ளல் மர்ஹூம் நளீம் ஹாஜியார் அவர்களுடன் இணைந்து மிகச் சிறந்த கல்வி சமூகத்தை இந்த நாட்டில் கட்டியெழுப்ப வேண்டும் என்பதற்காக மர்ஹூம் சுக்ரி நாடு முழுவதிலும் சென்று முஸ்லீம்கள் மத்தியிலே கல்வியிலே ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்காக பாடுபட்டார்.

இதேவேளை இலங்கை பேராதனை பல்கலைக்கழகத்தில் அரபு மொழி கற்கைகள் பீடத்தின் தலைவராகவும் செயற்பட்டார்.

ஜாமிஆ நளீமியா கலாபீடத்தினுடைய அபிவிருத்தியில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து செயற்பட்டதுடன், ஜாமிஆ நளீமியாவை உருவாக்குவதிலே முழுமையாக நளீம் ஹாஜியார் அவர்களுடன் நின்று அதனை உருவாக்கி மிகச் சிறந்த கலாபீடமாக கல்வியிலும், சமூக ரீதியிலும் அந்தஸ்த்துள்ள ஒரு நிறுவனமாக மாற்றுவதிலே இரவு பகலாக பாடுபட்ட ஒரு கல்விமானாகும்.

இலங்கை முஸ்லீம்களுடைய வரலாறு பாதுகாக்கப்பட வேண்டும் என்பதிலே வரலாறு தொடர்பான பல நூல்களை எழுதிய ஒரு மிகப்பெரிய ஒரு மனிதர்.

இப்புனிதமான றமழான் மாதத்திலே அவரை நாம் இழந்து இருக்கின்றோம். அழ்ழாஹ்விடத்தில் அவருக்காக நாம் பிரார்த்திப்போமாக. அழ்ழாஹுத்தாலா அவர்களது நல்லமல்களை அங்கீகரிக்க வேண்டும்.

கலாநிதி சுக்ரி அவர்களது கப்ரை சுவர்க்கப் பூஞ்சோலையாக எல்லாம் வல்ல இறைவன் மாற்ற வேண்டும் என பிரார்த்திப்பதாகவும் அனுதாபச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!