பரந்துபட்ட சுகாதார மேம்பாடுகளை ஊக்குவிப்பதே எமது இலக்கு! – திட்டப் பணிப்பாளர் இம்டாட் உறுதி!

கொரோனா நிலைமையினை கட்டுப்படுத்தும் நோக்கில் அரசாங்கம் அர்பணிப்புடன் பணியாற்றும் நிலையில் சமூக சேவைகளில் தளராது ஈடுபடுகின்ற எமது நிறுவனமும் இயன்றளவு சுகாதார உறுதித் தன்மைகளை முன்னெடுத்து வருகின்றது. – என GAFSO நிறுவனத்தின் நிகழ்ச்சித் திட்ட பணிப்பாளர் ஏ.ஜே. காமில் இம்டாட் தெரிவித்தார்.

அரச திட்டங்களை சிறப்படைய செய்தல் மற்றும் அரச ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கள் போன்ற பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வரும் GAFSO நிறுவனமானது தனது மற்றுமொரு பணியாக ஆசிய மன்றத்தின் உதவியோடு பிரதேச செயலகங்களில் முன்னரங்க வேளைகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்களுக்காக ஒரு தொகுதி சுகாதார மேம்பாட்டு பொருட்களை வழங்கி வைத்த சந்தர்ப்பத்திலேயே இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர் கூறியதாவது,

அம்பாறை மாவட்டத்திலுள்ள தெரிவு செய்யப்பட்ட பொலிஸ் நிலையங்கள், பிரதேச செயலகங்கள் மற்றும் சுகாதார பணியகங்கள் ஆகியவற்றுக்கு ஊழியர்களினதும், பாவனையாளர்களினதும் சுகாதார நலன்கருதி இவ்வாறான சுகாதார பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுகின்றது.

இதில் விஷேடமாக பொலிஸ் நிலையங்களுக்கு கால்களை பயன்படுத்தி செயற்படுத்தக்கூடிய ‘சிங்’ வழங்கப்படுவதுடன் ஏனைய அனைத்து நிறுவனங்களுக்கும் சுகாதார பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுகின்றன – என்றார்.

இந் நிலையில் நேற்று (19) சம்மாந்துறை பொலிஸ் நிலையம், சம்மாந்துறை பிரதேச செயலகம் ஆகியவற்றுக்கு இவ்வாறு உபகரணங்கள் GAFSO திட்ட பணிப்பாளர் ஏ.ஜே. காமில் இம்டாட் உட்பட கள உத்தியோகத்தர்களினால் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!