முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்புக்கு முகா வேட்பாளர்களை ஆதரிப்போம்.. எஹியாகான் அறைகூவல்.

முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்புக்கு முகா வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டுமென முகாவின் பிரதி தேசிய பொருளாளரான எ.சி.எஹியாகான் அறைகூவல் விடுத்துள்ளார்.

முஸ்லிம் காங்கிரஸினால் நிறுத்தப்பட்டுள்ள  வேட்பாளர்கள் வெற்றி பெற பிரார்த்திப்பதாகவும் அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது .

அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது ,

நாளுக்கு நாள் – முஸ்லிம் காங்கிரஸின் வாக்கு வங்கி அதிகரித்த வண்ணமே உள்ளது. ஏனென்றால் எமது சமூகத்திற்காக  குரல் கொடுக்கின்ற கட்சி என்ற அடிப்படையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டுமே உள்ளது என்பதை மீண்டும் மக்கள் வலுவான முறையில் உணர்ந்துள்ளமையினாலாகும்

ஆகையினால் எந்த ஒரு கொம்பன் வந்தாலும் முஸ்லிம் காங்கிரஸின் பிரதிநிதித்துவத்தில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது. அவ்வாறு எவரும் நினைப்பார்களாயின் அது ஒரு பகல் கனவாகவே இருக்கும்.

இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையின் வளர்ச்சியும் கட்சியின் வளர்ச்சியும் மக்கள் மனங்களில் மேலோங்கி நிற்கிறது. அந்த வளர்ச்சி சமூகத்துக்கு பெரும் நிம்மதியாக அமையும் என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றார்கள் .

ஆகையினால் நாம் எமது மக்களிடம் கேட்பது என்னவென்றால் சமூகத்தை பாதுகாப்பதற்காக முஸ்லிம் காங்கிரஸில் போட்டியிடும் வேட்பாளர்களை நீங்கள் வெற்றி பெற செய்ய வேண்டும் என்பதாகும்.

கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாக மாவட்டம் விட்டு மாவட்டம்
மாறக்கூடாது என்ற சட்டம் இன்னும் அமுலிலுள்ள காரணத்தினால், தேர்தல் நெருங்குகின்ற போது வேட்பாளர்களின் வெற்றிக்காக நேரடியாக களத்தில் நின்று பாடுபடுவோம் என்பதையும் இந்த இடத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த அகோரமான வைரஸ் பரவல் காரணத்தினால் கஷ்டப்படுகின்றவர்களுக்கு நாங்கள் மாவட்டத்தில் இல்லாவிட்டாலும் எனது அணியினரை வைத்து அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து கொண்ட வண்ணமே உள்ளேன்.

அதேபோல எமது கட்சித் தலைவர் உட்பட எமது வேட்பாளர்கள் அனைவரும் அவர்களால் இயன்ற உதவிகளை களத்தில் நின்று செய்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும் இந்த இடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன் அவர்களுக்கும் எனது பிரார்த்தனை உரித்தாகட்டும்.

அன்புடன்

எ.சி.எஹியாகான்
தேசிய பிரதி பொருளாளர்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!