கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினராக நிந்தவூரைச் சேர்ந்த P.T.A. ஹஸன் நியமனம்

நிந்தவூரைச் சேர்ந்த P.T.A. ஹஸன் கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினராக கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா யஹம்பத் அவர்களால் நியமிக்கப்பட்டுள்ளார். பல்துறைகளிலும் நிறைவான அறிவை பெற்றுள்ள இவர் இவ் ஆணைக்குழுவிற்கு நியமிக்கப்பட்டிருப்பதானது வரவேற்கத்தக்கது.

மேலும் இவர் அரச சார்பற்ற பல்கலைக்கழகமொன்றின் பதிவாளராகவும் பணியாற்றுகின்ற அதேவேளை, கிழக்கு மற்றும் தென்கிழக்கு பலகலைக்கழகங்களின் முன்னாள் பேரவை உறுப்பினராகவும் சேவையாற்றியதன் விளைவாக பல்கலைக்கழக முகாமைத்துவத்தில் அனுபவமுள்ள ஒரு சிறந்த நிர்வாகியாவார்என்பதோடு
பல தனியார் வர்த்தக நிறுவனங்களினது வர்த்தக அபிவிருத்தி ஆலோசகராகவும் பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீ் ஜயவர்த்தனபுர பல்கலைக் கழகத்தின்
பட்டப்பின்படிப்பு முகாமைத்துவ நிறுவனத்தில் பொது நிர்வாகத் துறையில் முதுமானிப்பட்டத்தினை கொண்டுள்ள இவர் வொல்வர்கம்ரன் பல்கலைக்கழகத்தில் சட்ட இளமானிப்பட்டத்தினையும், அவுஸ்திரேலியாவின் பொது கணக்காளர் நிறுவனம் மற்றும் இலங்கை மனிதவள மேலாண்மை நிறுவனத்தின் உறுப்பினராக பணியாற்றுவதும் விசேட அம்சமாகும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!