பெருநாளை தவிர்க்காது வீட்டிலிருந்தே கொண்டாடுங்கள்! – உருக்கமாக கூறுகிறார் றூமி ஜஃபர்

“பெருநாளை தவிர்க்காது, வீட்டிலிருந்தே கொண்டாடுங்கள். ஒரு வருடத்தில் கிடைக்கின்ற இரு பெரு நாட்களையும் மன நிறைவுடன் அனைவரும் கொண்டாட வேண்டியது கடமையாகும். இதனையே அரசும் வலியுறுத்துகிறது.”

– இவ்வாறு இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் முன்னாள் முகாமைத்துவ பணிப்பாளர் றூமி ஜஃபர் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்தாவது,

சில அரசியல்வாதிகளின் அறிக்கைகளிலும், சில முக்கியஸ்தர்களின் கருத்துக்களிலும் பெருநாளை தவிர்த்து அமைதி பேனும்படி செய்திகள் உலாவுகின்றன. அவை அவ்வாறு சொல்லப்படுவது கால சூழலுக்கு ஒப்பற்றது.

அரசாங்கம் பெருநாளை கொண்டாட வேண்டாம் என தடைசெய்யவில்லை. தங்களது வீடுகளிலிருந்து அமைதியான முறையில் பெருநாளை கொண்டாடும்படி பணித்துள்ளது. பலகாரங்கள் தயாரிப்பது, புதிய ஆடைகள் அணிவது, இரண்டு ரக்ஆத் சுன்னத் தொழுவது இவைகள் எதுவானாலும் உங்கள் வழமை போன்று செயற்படுத்திக் கொள்ளலாம். உற்றார், உறவினர்களின் வீடுகளுக்கு கூட செல்லாமல், வெளியிலே கூட்டங்களாக சேர்ந்து கொண்டு திரியாமல் வீட்டோடு அமைதி பேனுவது மாத்திரமே முக்கியமானது.

மார்க்கத்தில் சந்தோஷமாக கொண்டாடுவதற்கு அனுமதிக்கப்பட்ட நாட்களில் நோன்புப் பெருநாளும் ஒன்று. இதனை கட்டயாம் கொண்டாடி மகிழ வேண்டும். இந்த சந்தோஷங்களை உங்களது வீடுகளிலேயே கழித்துக் கொள்ளுங்கள்.

மாறாக பெருநாளை கொண்டாடாமல் யாரும் இருக்கத் தேவையில்லை. அவ்வாறு யாரும் சொல்லவுமில்லை. ஆனால், ஒரு சில அரசியல்வாதிகள் பெருநாளை தவிர்க்கும்படி அறிக்கைவிடுகிறார்கள். அவ்வாறான அறிக்கைகள் கண்டிக்கத்தக்கவை.

கையாலாகாத அறிக்கைகள் மூலம் சமூகத்தில் கவலைகளையும், சங்கடங்களையும் விளைவிக்காமல் சமூகம் என்ற உணர்வோடு நாம் அனைவரும் பயணிக்க வேண்டும். – என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!