நடந்தது கூட்டம் மாத்திரமே; தலைவர் தெரிவு அல்ல!! – தெளிவாக கூறினார் சம்மாந்துறை பதில் நம்பிக்கையாளர்!!

சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையின் பிரதம நம்பிக்கையாளர் ராஜினாமாவைத் தொடர்ந்து புதிய நம்பிக்கையாளரை யார் என்பது பலரிடமும் உலாவிக் கொண்டிருக்கின்ற ஆர்வார்ந்த கருத்து.

இதே நேரம் இன்று மஜ்லிஸ் அஷ்-ஷ_ரா சபை, நம்பிக்கையாளர் சபை கூட்டம் இடம்பெற்றுள்ளது. இக் கூட்டத்தில் புதிய பிரதம நம்பிக்கையாளர் தெரிவு இடம்பெறவுள்ளதாக பலரிடமும் பேசப்பட்ட தகவல்களின் பிரகாரம் குறித்த விடயத்தினை தெளிவுபடுத்துவதற்காக பதில் நம்பிக்கையாளர் மஹ்றூப் மௌலவியினை ‘நியூஸ்ப்ளஸ்’ செய்திக்காக தொடர்பு கொண்டபோது,

அவர் தெரிவித்ததாவது,

“இன்று இடம்பெற்ற கூட்டமானது பிரதம நம்பிக்கையாளர் தெரிவுக்கானதல்ல. வழமை போன்ற சாதரண கூட்டமே இடம்பெற்றது.

தற்போதைய நாட்டின் அசாதரண சூழ்நிலை நிலைமைகளை கருத்தில் கொண்டு பிரதம நம்பிக்கையாளர் தெரிவானது பெருநாளின் பிற்பாடுதான் இடம்பெறவுள்ளது என ஏகமானதாக தீர்மாணம் எடுக்கப்பட்டுள்ளது.” – என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!