மீண்டும் நாடுதழுவிய ரீதியில் பொலிஸ் ஊரடங்கு அமுல் !

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரையில் ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று (14) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஏனைய 23 மாவட்டங்களிலும் வழமைபோன்று இரவு 8 மணியிலிருந்து காலை 5 மணிவரை ஊரடங்கு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம் எதிர்வரும் 17ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்படவுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியில் 17ஆம் திகதி அமுல்படுத்தப்படும் ஊரடங்கு உத்தரவானது 18ஆம் திகதி காலை 5 மணிக்கு கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் தளத்தப்படவுள்ளது.

மேலும் குறித்த 23 மாவட்டங்களிலும் 19ஆம் திகதி தொடக்கம் 23ஆம் திகதி வரையில் தினமும் இரவு 8 மணி முதல் காலை 5 மணி வரையில் ஊரடங்கு அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!