GAFSO வினால் ‘கொவிட் – 19’ ஒழிப்பு, உளவியல் மேம்பாட்டு செயற்றிட்டம்! – விரைவில் ஆரம்பமாகும் என்கிறார் இம்டாட் !!


‘கொவிட் – 19’ இன் தொற்றிலிருந்து நாம் எவ்வாறு விடுபடுவது? இது இன்று இருக்கின்ற பெரும் பிரச்சினையாகவே உள்ளது. ‘கொவிட் 19’ ஐ தடுக்க எத்தனையோ பிராயச்சத்தனங்கள் செய்தும் இதுவரையில் அதன் முழு பெறுபேரும்; கிடைத்ததாக இல்லை.

இப்படி எத்தனையோ பல உபாயங்கள் கையாளப்படுகின்ற சந்தர்ப்பத்தில் சில ஆய்வுகளின் பின்னணியில் தற்போதைய சூழலில் அனைவரும் வீட்டில் முடங்கியிருப்பதால் சில ஆண்கள்/பெண்கள் எதிர்நோக்குகின்ற உளவியல் ரீதியிலான பிரச்சினைகள் அதே நேரம் சிறுவர்களின் மனோயியல் ரீதியிலான பிரச்சினைகள் போன்ற விடயங்கள் இனங்காணப்பட்டுள்ளன. அவ்வாறு இனங்கானப்பட்ட பிரச்சினைகளுக்கு எவ்வாறு முகங்கொடுப்பது எனும் செயற்றிட்டத்துக்கு GAFSO நிறுவனம் முனைந்துள்ளது.

இத் திட்டத்தில் உளவியல்சார் விழிப்புணர்வுகள், ஆரோக்கிய வாழ்வுக்கான வழிகாட்டல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், சுகாதார வழிமுறைகள் மற்றும் தொற்றுநீக்கி செயற்பாடுகள் போன்ற பல்வேறு விடயங்கள் உள்ளடக்கப்படவுள்ளன. குறித்த திட்டத்தின் முதற்கட்டமாக கொவிட் பாதுகாப்பு முன்னெடுப்பு செயற்றிட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது.

இதில், முன்னின்று செயற்படும் அரச ஊழியர்கள் மற்றும் பொலிஸாருக்கான பாதுகாப்பு உபகரணங்கள் போன்றவைகள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆரம்ப நடவடிக்கைகள் இன்னும் சில நாட்களில் நடைபெவுள்ளதாகவும், அவற்றின் முதற்கட்டமாக பொலிஸ்நிலையங்கள் மற்றும் பொது இடங்களுக்கு கை கழுவும் நவீன முறையிலமைந்த ‘சிங்’ வழங்கப்படவுள்ளதாகவும், அவற்றோடு தொடராக பாதுகாப்பு உபகரணங்களையும் வழங்கவுள்ளதாக GAFSO நிறுவனத்தின் திட்டப்பணிப்பாளர் ஏ.ஜே. காமில் இம்டாட் தெரிவித்தார். இதன் முதல்கட்டமாக அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் அம்பாரை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் போன்ற உயர் அதிகாரிகளை சந்திக்கும் நிகழ்வில் பணிப்பளர் அண்மையில் கலந்து கொண்டார்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!