மக்கள் வாழ்க்கை வழமை நிலை: பொலிஸ் மா அதிபரினால் வெளியிடப்பட்ட அறிக்கை

இன்று (11) ஆரம்பமாகியுள்ள மக்கள் வாழ்க்கையை வழமை நிலைமைக்கு முன்னெடுக்கும் அரச மற்றும் தனியார் துறைகளில் கடமைகளை ஆரம்பித்தல், போக்குவரத்து சேவை மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பில் முன்னெடுக்கப்பட வேண்டிய முறை தொடர்பான பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.

இது தொடர்பாக பொலிஸ் மா அதிபரினால் வெளியிடப்பட்ட அறிக்கை பின்வருமாறு:

 

2020.05.10
பொலிஸ் தலைமையகம், கொழும்பு, இலங்கை

எனது இலக்கம் : PMD /SPR/20/20

2020.05.10 மணித்தியாலம் 19.00

கொவிட் 19 வைரசு தொற்றை தடுப்பதற்கான தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதுடன் மக்கள் வாழ்க்கையை வழமை நிலைமைக்கு முன்னெடுத்தல்

நாடு முழுவதிலும் கொவிட் 19 வைரசு பரவுவதை தடுப்பதற்காக தனிமைப்படுத்தலுக்கான ஊரடங்குச் சட்டம் சூழ்நிலைக்கு அமைவான வகையில் நடைமுறைப்படுத்தப்படும்.

இவ்வாறு தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படுவதுடன் மக்கள் வாழ்க்கையை வழமை நிலைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கையை 2020.05.11 ஆம் திகதி தொடக்கம் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கமைவாக கீழ்கண்ட விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்துவது அத்தியாவசியமாகும்.

• மேல் மாகாணம் மற்றும் புத்தளம் மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் உள்ள காலப்பகுதியில் மக்கள் வாழ்க்கையை வழமை நிலைமைக்கு முன்னெடுத்தல்

1. தேவைக்கு ஏற்ற எண்ணிக்கையிலான ஊழியர்களை மாத்திரம் பணிக்கு அழைத்து அரச நிறுவனம் அல்லது அலுவலகங்களை திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு வரும் ஊழியர்களின் சேவை அடையாள அட்டையை அல்லது நிறுவனத்தின் கடிதமொன்றை அல்லது அந்த கடிதத்தின் இலத்திரனியல் பிரதியொன்றை அவசரகால அனுமதிப் பத்திரமாகப் பயன்படுத்த முடியும் இதில் மாவட்ட எல்லையைக் கடந்து கடமைக்கான இடத்திற்கு வருதல் அல்லது வெளியே செல்லும் ஊழியர்களுக்காக வைத்திய அதிகாரியின் MHO  சான்றிதழைப் பெற்றுக் கொள்வது அவசியமல்ல.

அரச நிறுவனத்திற்கு தனிப்பட்ட வாகனங்களிலும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தினால் வழங்கப்படும் வாகனங்களில் வரும் அரச ஊழியர்கள் மணித்தியாலம் 8.30 இற்கு முன்னர் அலுவலக இடத்திற்கு சமூகமளித்து, கடமையை பூர்த்தி செய்து மணித்தியாளம் 15.00 இற்கும் 16.00 மணித்தியாலத்திற்குமான காலப்பகுதியில் வெளியேறுவது அவசியமாகும். அவ்வாறு இருத்த போதிலும் அரசாங்கத்தின் தொழிற்சாலைக்காகவும் சேவை அடிப்படை ரீதியில் முன்னெடுக்கப்படும் அரச நிறுவனத்திற்கு கால நேரம் பொருந்தாது.

தனியார் நிறுவனம் / அலுவலகங்களில் தொழிலுக்காக தனியார் வாகனங்களிலும் சம்பந்தப்பட்ட நிறுவனத்தினால் வழங்கப்படும் வாகனங்களில் வரும் ஊழியர்கள் மணித்தியாலம் 8.30 இற்கும் மணித்தியாலம் 10.00 இற்கும் இடையிலான காலப்பகுதியில் தமது சேவை இடத்திற்கு வரவேண்டும் என எதிர்பார்க்கப்படுவதுடன், கடமையை நிறைவு செய்து ஊழியர்களை அழைத்துச் செல்லும் வாகனம் மணித்தியாலம் 16.00 இற்கும் மணித்தியாளம் 17.00 இடையிலான காலப்பகுதியில் புறப்பட வேண்டும்.

2. பொதுப் போக்குவரத்து சேவை (ரயில் மற்றும் பஸ்)
பயணிகளின் போக்குவரத்தில் சுகாதார பாதுகாப்பு முறையை பின்பற்றி சம்பந்தப்பட்ட பஸ் உரிமையாளர், சாரதிகள் நடத்துனர்கள் செயல்பட வேண்டும்.

3. அத்தியாவசிய பொதுமக்கள் சேவையை வழங்கும் பொழுது மற்றும் உணவு பொருள் மற்றும் பொருள் விற்பனையை மேற்கொள்ளும் மொத்த மற்றும் சில்லறை வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்படுகின்றது. இதன் கீழ் மருந்தகங்கள் பலசரக்கு , தொலைபேசி விற்பனை நிலையங்கள், புடவை விற்பனை நிலையங்கள், புத்தகம் மற்றும் பத்திரிகை விற்பனை நிலையங்கள் மற்றும் அதிஷ்ட இலாபசீட்டு விற்பனை கூடங்களுக்கும் அனுமதி வழங்கப்படும்.

4. மேலே குறிப்பிட்ட வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்ட போதிலும் இந்த வர்த்தக நிலையங்களில் பொருட்கள் மற்றும் சேவைகளை கொள்வனவு செய்வது தாம் பதிவைக்கொண்டுள்ள அல்லது தங்குமிடத்தைக் கொண்டுள்ள இடத்திற்கு அருகில் உள்ள வர்த்தக நிலையத்தில் அல்லது சேவையை வழங்கும் நிலையத்தில் மாத்திரமாகும்.

5. பொதுமக்களின் தேவைக்காக வெளியில் செல்வதற்கு ஊரடங்கு சட்ட அனுமதிப்பத்திரதை பெற்றுள்ள தனியார் வாகனம் மணித்தியாலம் 10.30 இற்கும் மணித்தியாலம் 15.00 இற்கு இடையிலான காலப்பகுதியில் மாத்திரம் பயணிப்பதற்கான அனுமதி வழங்க்கபடும் .இருப்பினும் இதற்கமைவாக வீட்டிற்கு வெளியே தனியான நடவடிக்கைகளுக்காக செல்லும் அனைவரும் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை முன்னெடுத்தல் உள்ளிட்ட சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

மேலும் அத்தியாவசிய உணவுப் பொருட்களை கொள்வனவு செய்தல் , அத்தியாவசிய சேவைகளைப் பெற்றுக் கொள்ளுதல் அல்லது மருந்து வகைகளை கொள்வனவு செய்தல் போன்;ற தனிப்பட்ட தேவைகளுக்காக அவசரகால அனுமதிப்பத்திரமின்றி வெளியே செல்வதற்கு அனுமதி வழங்கப்படுவது தேசிய அடையாள அட்டையில் இறுதி இலக்கத்திற்கு அமைவாகவே ஆகும். இதற்கமைவாக 1,2 இலக்கங்களைக்கொண்டவர்கள் திங்கட்கிழமைகளிலும் , 3,4 செவ்வாய்க்கிழமைகளிலும், 5,6 புதன்கிழமைகளிலும், 7,8 வியாழக்கிழமைகளிலும் மற்றும் 9,0 சனிக்கிழமைகளிலும் ஆகும். இருப்பினும் தனிமைப்படுத்தலுக்கு / சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு சுகாதார வைத்திய அதிகாரிகளின் சான்றிதழ் கிடைக்கும் வரையில் மேற்குறிப்பிட்ட வகையில் பயணிக்க முடியாது.

6. சிறிய உணவகங்கள், உணவை வழங்கும் சிறிய பெட்டிக்கடைகள் மற்றும் ரெஸ்டுரண்டுகளை திறந்து முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கப்படமாட்டாது. அத்தோடு இவற்றை திறப்பது தொடர்பில் காலத்திற்கு அமைவாக எதிர்காலத்தில் கவனத்தில் கொள்ளப்படும்.

7. தற்பொழுது அனுமதி வழங்கப்பட்டுள்ள உணவு விநியோகம் (Delivery service) சேவை நிறுவனத்திற்காக தொடர்ந்தும் செயலபட முடியும்.

8. சுப்பர் மார்க்கட்டுகளை திறந்து முன்னெடுப்பதற்கு முடிவதுடன் இதில் சம்பந்தப்பட்ட சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடித்தல் அதன் உரிமையாளர் மற்றும் ஊழியர்களின் பொறுப்பாகும்.

9. முச்சக்கர வண்டிகளில் ஆகக் கூடியவகையில் பயணிக்க முடிகின்றமை சாரதியைத் தவிர இருவர் மாத்திரமே ஆகும். இதே போன்று வாடகைக்கார் (Uber, Pickme போன்றவை) வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்படுவதுடன் இதில் பயணிப்பதற்கு சாரதியைத் தவிர ஆகக் கூடிய வகையில் 3 பேருக்கு மாத்திரமே ஆகும். இதன் போது சுகாதார பாதுகாப்பு முறை கடைபிடிக்கப்பட வேண்டும்.

இருப்பினும் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்காக ஊழியர்களை அழைத்து வரும் பஸ் உள்ளிட்ட ஏனைய வாகனங்களில், ஊழியர்களை அழைத்து வரும் பொழுது சுகாதார அதிகாரிகளினால் வழங்கப்பட்டுள்ள சுகாதார பாதுகாப்ப விதிமுறைகளை (அதாவது முகக்கவசம் அணிதல், கிருமிஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தல் , உடல் வெப்பம் பரிசோதனை செய்தல் ) உரிய முறையில் கடைபிடித்து வாகனத்தின் ஆசனங்களின் எண்ணிக்கைக்கு பயணிகளை அழைத்து வருவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படுகின்றது.

10. சலூன் மற்றும் அழகு நிலையங்களை திறந்து முன்னெடுக்க முடிவதுடன் இதில் அடிப்படையாக இந்த நிலையங்களினால் அவ்வாறு முன்னெடுப்பதற்காக பிரதேச வைத்திய அதிகாரிகளின் சான்றிதழை பெற்றக் கொள்ள வேண்டும். மேலும் சுகாதார சேவை பணிப்பாளர் நாயகத்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ள சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளுக்கு அமைவாக செயல்படுவது சம்பந்தப்பட்ட நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களின் பொறுப்பாகும்.

11. தனியார் வைத்திய மத்திய நிலையங்களை திறந்து முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கப்படுகின்றது. இதில் நிறுவனத்தினால் அவ்வாறு முன்னெடுப்பதற்கு பிரதேச வைத்திய அதிகாரிகளின் சான்றிதழைப் பெற்றுக் கொள்வதுடன், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் குறிக்கப்பட்டுள்ள சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிப்பது நிறுவனங்களின் உரிமையானர்களினதும் ஊழியர்களினதும் பொறுப்பாகும்.

12. சுற்றுலா ஹோட்டல்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்படுகின்றது. இருப்பினம் இந்த ஹோட்டல்களில் ரெஸ்டுரண்டுகளை திறத்தல் மீள அறிவிக்கும் வரையில் இடைநிறுத்தப்பட்டுள்ளது. திறக்கப்படும் அனைத்து சுற்றுலா ஹோட்டல்களிலும் சுகாதார மற்றும் சுதேச வைத்திய சேவை அமைச்சினால் 2020.04.17 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள COVID 19 இற்கான பதிலளித்தல் தொடர்பான செயற்பாட்டு வழிகாட்டிதொகுப்பு மற்றும் அதற்கமைவாக அடிக்கடி வெளியிடப்படும் அறிவுறுத்தல் மற்றும் சுகாதார பாதுகாப்பு விதிகளை கடைபிடிப்பது அத்தியாவசியமாகும்.

13. பொருளாதார மத்திய நிலையங்கள் உள்ளடங்கலாக கொழும்பு மெனிங் வர்த்தக சந்தை உள்ளிட்ட மொத்த வர்த்தகத்திற்கான சம்பந்தப்பட்ட வர்த்தக நிலையங்களை முன்னெடுப்பதற்கு தொற்று நீக்கு விதிகளுக்கு அமைவாகவும் சுகாதார பாதுகாப்பு முறைகளை கடைபிடிப்பதற்கு அமைவாகவும் செயல்படுவதற்கு அனுமதி கிடைக்கின்றது.

14. அனைத்து நிர்மாணப்பணிகளுக்கும் அனுமதி வழங்கப்படுவதுடன் நிர்மாண தொழிற்துறைக்கான பொருட்களை (கல்,மணல்,ஓடு, செங்கல் முதலானவை) ஏற்றிச் செல்வதற்கு அனுமதி கிடைக்கின்றது. இருப்பினும் நிர்மாணப்பணிகள் இடம்பெறும் வேலைத்தளத்திற்கு அவசியம் தேவையான ஊழியர்கள் சிலரை மாத்திரம் அழைப்பது சம்பந்தப்பட்ட முகாமையாளரின் பொறுப்பாவதுடன் அழைக்கப்படும் அனைத்து ஊழியர்களுக்கும் தனித்தனியாக கடிதங்களை வழங்குவது அவசியமாகும்.

15. கீழ்கண்ட நிறுவனம் / இடங்கள் மீள அறிவிக்கும் வரையில் திறப்பதற்கும் ,திறந்து முன்னெடுப்பதற்கும் அனுமதியில்லை

a. வாராந்த சந்தை, நாளாந்த சந்தை முதலான கூட்டு ரீதியில் வர்த்தகம் இடம்பெறும் இடங்கள் மற்றும் பொது மக்கள் பெருமளவில் கூடும் கூட்டு வர்த்தக சந்தை (மஹாரகம, பமுனுவ போன்றவை)

b. உடற்பயிற்சி மத்திய நிலையங்கள்

c. Spa நிலையங்கள்

d . கிளப்

e . சூதாட்ட நிலையங்கள் (புக்கி)

 

பொலிஸ் மத்திய நிலையம்
பொலிஸ் தலைமையகம்
கொழும்பு 01 (பானம)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!