‘கொட்டில்’ மூழ்கி சம்மாந்துறையில் இரு சிறுவர்கள் மரணம்!

சம்மாந்துறை பிரதேசத்தில் இரு சிறுவர்கள் (6 வயது, 3 வயது) கொட்டிலிருந்து (கிணறு போன்ற ஒரு குழி) இன்று (09) மீட்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளனர். உடனடியாக வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டும் சிறுவர்கள் இருவரும் உயிர் காப்பாற்றப்பட முடியாமல் மரணித்துள்ளனர்.

இது விடயமாக சம்மாந்துறை வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஆசாத் எம். ஹனீபாவிடம் வினவியபோது அவர் தெரிவித்ததாவது,

இன்று பிற்பகல் வேளையிலேயே குறித்த சிறுவர்கள் இவ்வாறு கொட்டில் மூழ்கியவண்ணம் மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளார்கள். ஸ்தலத்திலேயே உயிர் நீத்துள்ளனர். இது குறித்தான முழு விபரம் தற்போதைய நிலையில் தெளிவில்லாத நிலையில் விசாரணைகளின் பின்னர் முழுமையான விபரத்தினை வழங்குகின்றேன் என்றார்.
எனினும் பொலிஸார் இது குறித்தான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்மை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!