கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி 900 மில்லியனாக  அதிகரிப்பு 

இலங்கை வெளிநாட்டு சேவைகள் அதிகாரிகள் சங்கம் 2.8 மில்லியன் ரூபாவை கொவிட் 19 
சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களிடம் 
அண்மையில் கையளித்தது. அமைச்சர் தினேஷ் குணவர்த்தனவும் இந்நிகழ்வில் 
கலந்துகொண்டார். 
சபரகமுவை மாகாண சபை நிதியம் ஒரு மில்லியன் ரூபாவையும், இரத்தினபுரியை சேர்ந்த 
திரு. ஜானக ரணவக ஒரு லட்சம் ரூபாவையும், இரத்தினபுரி மாவட்ட சுகாதார மருத்துவ 
அதிகாரிகள் சங்கம் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாவையும் நிதியத்திற்கு அன்பளிப்பு 
செய்துள்ளதுடன், அதற்கான காசோலைகள் மாகாண ஆளுநர் டிகிரி கொப்பேகடுவை 
அவர்களினால் ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டன. 
இலங்கை மத்திய வங்கியின் ஓய்வுபெற்ற அதிகாரிகளின் சங்கம் 05 லட்சம் ரூபாவையும் 
இலங்கை டெலிகொம் பௌத்த சங்கம் 03 லட்சம் ரூபாவையும் நிதியத்திற்கு அன்பளிப்பு 
செய்துள்ளனர். 
லங்கா சீனி தனியார் கம்பனி நேரடியாக வைப்பு செய்த 3.5மில்லியன் ரூபாவுடன் கொவிட் 
19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் மீதி தற்போது 900 மில்லியன் ரூபாவாக 
அதிகரித்துள்ளது. 
இலங்கை வங்கியின் நிறுவனக் கிளையின் 85737373 என்ற இலக்கத்தையுடைய கொவிட் 19 
சுகாதார,சமூகபாதுகாப்பு நிதியத்திற்கு உள்நாட்டு வெளிநாட்டு எந்தவொருவருக்கும் 
அன்பளிப்புகளை அல்லது நேரடி வைப்புகளை செய்ய முடியும். சட்டபூர்வமான கணக்கின் 
மூலம் நிதியத்திற்கு செய்யப்படும் அன்பளிப்புகள் வரி மற்றும் வெளிநாட்டு நாணய சட்ட 
திட்டங்களில் இருந்து விலக்களிக்கப்படும். காசோலை, டெலிகிராப் ஊடாக நிதியினை 
வைப்பிலிட முடியும். 
0112354479/0112354354 என்ற தொலைபேசி இலக்கங்களின் ஊடாக பணிப்பாளர் நாயகம் 
(நிர்வாகம்) கே.பீ. எகொடவெலே அவர்களை தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களை 
தெரிந்துகொள்ள முடியும். 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!