தாதியர்களுக்கென தனியான விசேட விடுதி….

தேசிய தொற்றுநோய் வைத்தியசாலை தாதியர்களுக்கு தங்குவதற்காக புதிய விடுதியொன்று திறந்துவைக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட பலர், தேசிய தொற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதை கருத்திற் கொண்டே, குறித்த விடுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, இலங்கை துறைமுக அதிகாரசபையின் தொழில்நுட்ப உதவியுடன் இந்த நிர்மாணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன்படி, 16 அறைகளைக் கொண்ட குறித்த விடுதி இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த விடுதியில் 30 தாதியர்களுக்கு , தங்குவதற்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

(MRM.RAASITH)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!