காத்தான்குடி சுற்றிவளைப்பு…

காத்தான்குடி கடற்கரை பகுதியில் உள்ள விடுதியொன்றில் சுற்றிவளைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குற்றபுலனாய்வு பிரிவு மற்றும் விசேட அதிரடி படையினர் இணைந்து இன்று இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளதாக தெரியவருகின்றது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கைதாகியுள்ள பெண்ணொருவரின் வாக்கு மூலத்திற்கு அமைவாக இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரியான ஸஹ்ரான் ஹாஸிம் முன்னெடுத்த போதனைகளில் பங்கேட்பதற்காக சென்றிருந்த பலர் தங்கியிருந்த இடமாக இந்த விடுதி காணப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, குற்றபுலனாய்வு பிரிவு மற்றும் விசேட அதிரடி படையினர் தொடர்ந்தும் குறித்த விடுதியில் தேடுதல்களை முன்னெடுத்து வருகின்றனர்.

(எம்.ஆர்.எம்.றாசித்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!