கல்முனையன்ஸ் போரமினால் அம்பாறை மாவட்டத்தில் பேரீச்சம்பழ விநியோகம்.

(எம்.என்.எம்.அப்ராஸ்)

கொவிட் 19 இடர் நிலையினால் வாழ்வாதர ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கும் அம்பாறை மாவட்டத்தில் உள்ள மக்களுக்கு புனித ரமழான் நோன்பினை முன்னிட்டு பேரீச்சம்பழம் வழங்கும்

 செயற்றிட்டம் கல்முனையன்ஸ் போரமினால் உத்தியோகபூர்வமாக இன்று 06-05-2020 பிற்பகல் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கல்முனையன்ஸ் போரத்தின் செயற்பாட்டாளர் பீ. எம் சன்ஸீர் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இவ்நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம். நஸீர் அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு இச் செயற்றிட்டத்தை அங்குரார்ப்பணம் செய்துவைத்தார்.

கல்முனையன்ஸ் போரம் விடுத்த வேண்டுகோளுக்கமைய 6 தொன் பேரிச்சம்பழத்தினை பெஸ்ட் புட் மார்கடிங் பிரைவட் லிமிடெட் நிறுவனத்தினர் நன்கொடையாக வழங்கியிருந்தனர்.

குறித்த பேரீச்சம்பழமானது அம்பாறை மாவட்டத்திலுள்ள சகல பிரதேசங்களில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட தொண்டர் அமைப்புகளுடாக இணங்கானப்பட்ட பயனாளிக் குடும்பங்களுக்கு விநியோகிக்கப்பட விருக்கின்றன.

பல்வேறு சமூக நல வேலைத்திட்டத்தின் முன்னெடுத்து வருகின்ற கல்முனையன்ஸ் போரமானது நாட்டில் நிலவும் கொவிட்-19 இடர் நிலையில் சுமார் 1.1 மில்லியன் ரூபா பெறுமதியான உலர் உணவுப்பொதிகள் நிவாரணங்களாக கடந்த ஏப்ரல் மாதம் கல்முனையன்ஸ் போரம் கல்முனை பிராந்தியத்தில் விநியோகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன் போது கல்முனை பிரதேச செயலக உதவிதிட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜவ்பர் ,
தெரிவுசெய்யப்பட்ட தொண்டர் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கல்முனையன்ஸ் போரத்தின் அங்கத்தவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!