பிரயோசணமற்ற கூட்டத்திற்கு நாங்கள் தலை சாயோம்!  – செல்வது முடிவல்ல என ஆணித்தரமாக கூறினார் முன்னாள் எம்.பி. மன்சூர்!!

எந்தப் பிரயோசணமும் இல்லாத கூட்டத்திற்கு எமது நேர, காலங்களை செலவிட நாங்கள் தயாரில்லை. நாளை பிரதமரால் கூட்டப்பட்டுள்ள கூட்டத்தை பகிஷ்கரிக்கின்றோம் – என ஆணித்தரமாக தெரிவித்தார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர்.

நாளைய தினம் அலரி மாளிகையில் இடம்பெறவுள்ள கூட்டம் குறித்து பாராளுமன்ற உறுப்பினரின் கருத்துக்காக ‘நியூஸ்ப்ளஸ்’ தொடர்பு கொண்ட வேளையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

எமது கட்சியான முஸ்லிம் காங்கிரஸ_ம், நாங்கள் இம் முறை சேர்ந்து தேர்தலில் களமிறங்கியிருக்கும் ஐக்கிய மக்கள் சக்தியும் எடுத்த முடிவின் பிரகாரம் பிரதமரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கூட்டத்திற்கு சமூகமளியோம்.

இந்த நெருக்கடி காலத்தில் இது எவ்வகையிலும் சட்ட ரீதியான கூட்டமாகவோ அல்லது எவ்விதமான சட்ட ரீதியான தீர்மானங்களையோ எடுக்க கூடியதாக இல்லை. இது வெறும் பூச்சாண்டியே!. இதற்கு செல்ல வேண்டிய அவசியம் எமக்கு இல்லை. இதுவே எமது நிலைப்பாடு.

அப்படி அவசியம் இருந்தால், நாட்டுக்காக பாராளுமன்ற உறுப்பினர்களை கூட்ட வேண்டும் என்றால் பாராளுமன்றத்தை கூட்டட்டும் அது புதிய பாராளுமன்றமோ அல்லது பழைய பாராளுமன்றமோ அரசியலமைப்பின் பிரகாரம் எதையாவது கூட்டட்டும். இதனைவிடுத்து இவ்வாறான மெய்பூசி மெழுகல் விடயங்களுக்காக மக்கள் பிரதிநிதியான நாங்கள் கையசைக்க தயாரில்லை – என்றார்.

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!