மருதூரின் தொழில் நுட்பவியலாளர் அஸீஸ் இன் மற்றுமொரு அசத்தல் கண்டுபிடிப்பு.

#கோவிட்-19 கொரோனா நோய்தொற்றில் இருந்து இருந்து மக்களை பாதுகாக்கும் முனைப்பில் சாதாரணமாக காலின் அழுத்தத்தினாலும் இயங்கக்கூடிய தானியங்கி கைகழுவும் சாதனமொன்றை சாய்ந்தமருது கண்டுபிடிப்பாளர் ஐ.எல்.எம் அஸீஸ் உருவாக்கி உள்ளார்.

அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் எல்லைக்குட்பட்ட சாய்ந்தமருது பகுதியில் வசிக்கும் இவர் முன்னர் பல இயந்திரங்களை கண்டுபிடித்து சாதனைகள் படைத்தவர் என்பது குறிப்பிடதக்கது.

மேலும் குறித்த புதிய கண்டுப்பினை செய்வதற்கு தனது அயராத முயற்சி, இறைவனும் உறுதுணையாக இருந்ததாக தெரிவித்த அவர், மின்சார வசதி தேவையில்லை சாதாரணமாக நீர் மூலம் இந்த சாதனத்தை உபயோக படுத்த முடியும் எனவும் தெரிவித்தார்.

(முஹம்மத் மர்ஷாத்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!