கொரோனாவுக்கு தமிழ் அரசியல் கைதிகளை  பலிகொடுத்துவிடாதீர்கள் பிணையிலாவது விடுதலை  செய்யுங்கள் வைத்திய கலாநிதி சிவமோகன் வேண்டுகோள் 

கொரோனா தொற்றுக்களின  எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே போகிறது  மகவும் நெருக்கமான இடங்களின் தமிழ் அரசியல்கைதிகளை வைத்திருப்பது ஆபத்தான விடயமாகும்  எனவே பிணையிலாவது அவர்களை விடுவிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் வைத்திய கலாநிதி சிவமோகன் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார். 
 
இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் நாட்டில் கொரோனா தொற்று மிகவும் வேகமாக பரவி வருகிறத  அதுவும் முகாம்களில் உள்ள கடற்படையினர் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வருகிறது இந்த நிலையில் அரசியல் கைதிகளை அடைத்து வைத்திருப்பதில் எந்த வித நியாயமும் இல்லை சிறைக்கூடங்களில் சொல்லிக் கொள்ளும் அளவு சுகாதார தூய்மை இருக்கும்  என்று நம்ப முடியாது. 
 
யாழ்ப்பாணத்தில்  அப்பாவிப் பொதுமக்களை கொலை செய்த இராணுவ வீரருக்கு  நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது அந்த இராணுவ வீரரைபொது மன்னிப்பில் விடுதலை செய்ய முடிந்த ஜனாதிபதிக்கு கொலைக்குற்றங்கள் ஏதும் செய்யாமல் தங்களுடைய இனத்தின் விடுதலைக்காகபோராடி பல வருடங்கள் சிறையில் தண்டனை பெற்று வரும் தமிழ் அரசியல் கைதிகளை ஏன் விடுதலை செய்ய முடியாது
எனவே ஐனாதிபதி அவர்கள் இதை ஒரு அவசர நிலையாக கருதி கொரோனாவிற்கு தமிழ் அரசியல் கைதிகளை பலி கொடுக்காமல்அவர்களை பிணையிலாவது விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வைத்திய கலாநிதி சிவமோகன் அவர்கள் கேட்டுக் கொண்டார் 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!