ஜப்பான் கடற்படையின் “டெருசுகி” கப்பல் கொழும்பு துறைமுத்துக்கு விஜயம்

ஜப்பான் கடற்படையின் “டெருசுகி” கப்பல் நல்லெண்ண விஜயத்தை மேற்கொண்டு இன்று (01)  கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

“டெருசுகி”  இரண்டு நாட்கள் இலங்கையில் தங்கியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கப்பலின்  மெய்காவலர் பிரிவு தளபதி வீ, கெப்டன் மஷாஷி கொண்டோவு மற்றும் கப்பலின் கட்டளைத்தளபதி செய்ச்சி ஹசிமடோ ஆகியோர், இலங்கை மேற்கு பகுதியின் கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் நிராஜ அட்டிகலவுடன் கலந்துரையாடியதுடன், இவர்களுக்கிடையில்  நினைவுச் சின்னங்கள் பகிரப்பட்டன.

மேலும் இச் சந்திப்பில் ஜப்பானிய கடற்படையினர் மற்றும் இலங்கை கடற்படையினருக்கிடயில் உடற்பயிற்சிகள் மற்றும் நட்பு ரீதியான நிகழ்வுகள் நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!