ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரியில் 19 மாணவர்கள் 9 பாடங்களிலும் A சித்தி!

2019  டிசம்பரில் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சைக்கு தோற்றிய ஹட்டன் ஹைலன்ஸ் கல்லூரி மாணவர்களில் 19 பேர் 9 பாடங்களிலும் சிறப்பு (A) சித்தி பெற்றுள்ளனர்.

ஆங்கில மொழிமூலம் மூன்று மாணவர்கள் 9 ஏ சித்திகளையும், தமிழ் மொழிமூலம் 16 மாணவர்கள் 9 ஏ சித்திகளையும் பெற்றுள்ளனர்.

பரீட்சைக்கு தோற்றிய 162 மாணவர்களுள் அனைவருமே உயர்தரம் கற்பதற்கு தகுதிபெற்றுள்ளனர்.

தமிழ், சமயம், வரலாறு உட்பட ஐந்து பாடங்களில் மாணவர்கள் 100 வீத சித்தியினை பெற்றுள்ளனர் என்று அதிபர் ஆர்.ஸ்ரீதர் தெரிவித்தார்.

ஹட்டன் கே,சுந்தரலிங்கம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!