சதொசவில் பொருட்கள் கொள்வனவு செய்வோருக்கான நடைமுறை!

சதொச விற்பனை நிலையங்களுக்கு தனிப்பட்ட ரீதியில் பொருட் கொள்வனவிற்கு வருவோருக்கு பொருட்களை விநியோகிக்கும் போது மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் சுற்றறிக்கையொன்று வௌியிடப்பட்டுள்ளது,

இதனடிப்படையில் கடந்த 16 ஆம் திகதி முதல் நிவாரண விலையில் பொருட்கள் விநியோகத்தின் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் 65 ரூபா நிவாரண விலையில் பருப்பினை விநியோகிக்கையில் ஒருவருக்கு இரண்டு கிலோ மாத்திரமே வழங்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் 100 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ள நிவாரண விலையில் ஒருவருக்கு அதிக பட்சம் இரண்டு ரின் மீன்களை மாத்திரமே விநியோகிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது,

எவ்வாறாயினும் இதன் போது பருப்பு மற்றும் ரின் மீனை மாத்திரம் கொள்வனவு செய்ய முடியாது என தெரிவி்ககப்பட்டுள்ளது.

மேலும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு பிரதேச செயலகங்கள் ஊடாக பொருட்கள் விநியோகிப்பது தொடர்பிலும் சில வரையறைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

குறைந்த வருமானம் பெறுவோர் சதொசவில் பொருட் கொள்வனவிற்கு வரும்போது பிரதேச செயலாளரின் எழுத்து மூல ஆவணமொன்றை சமர்ப்பிக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது,

அத்துடன் இலங்கை சதொச நிறுவனத் தலைவர் அல்லது பிரதான நிறைவேற்று அதிகாரி அல்லது பிரதி பொதுமுகாமையாளர் ஊடாக அதற்கு எழுத்து மூல அனுமதி பெறப்பட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.,

மேலும் அந்த கடிதங்களில் பொருட்களின் அளவு தொடர்பில் தௌிவாக குறிப்பிட வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.,

இதேவேளை விகாரைகள் மற்றும் ஏனைய மதஸ்தலங்களுக்கு பொருட்களை விநியோகிப்பது தொடர்பிலும் அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது,

விஹாரைகளின் தலைமை மதகுரு அல்லது ஏனைய மதஸ்தலங்களின் தலைமை மதகுருக்கள் எழுத்து மூல கோரிக்கை கடிதமொன்றை அனுப்ப வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது,

அத்துடன் அந்த எழுத்து மூல கோரிக்கை கடிதத்தில் எத்தனை பேருக்கு பொருட்கள் தேவைப்படுகின்றன,எவ்வளவு அவசியமாகின்றது என்பன குறிப்பிடப்படுவதுடன் மற்றும் பிறருக்கு அது வழங்கப்படக்கூடாது எனவும் சதொச பிராந்திய முகாமையாளர்களுக்கு அனுப்பபட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டில் சதொச ஊடாக மொத்த விற்பனை அடிப்படையில் வர்த்தக நிலையங்களுக்கு பொருட்களை விநியோகிப்பது தொடர்பான நடைமுறைகள் சதொச விற்பனை நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது,

இதன் போது மொத்த விற்பனை வர்த்தகர்களுக்கு ஒரு கிலோ பருப்பு 150 ரூபாவுக்கும் டின் மீன் 200 ரூபாவிற்கும் சதொசவினால் விற்பனை செய்யப்படவுள்ளது,

சிவப்பு சீனி,பெரிய வெங்காயம்,உருளைங்கிழங்கு,வௌ்ளை வெங்காயம்,சதொசவில் விற்பனை செய்யப்படும் பால்மா மற்றும் உப்பு ஆகியன சந்தையில் விற்பனை செய்யப்படும் மொத்த விற்பனை விலைக்கமைய விற்பனை செய்யப்படவுள்ளதாக சதொச விற்பனை நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது,

இந்த நடைமுறையை தொடர்ச்சியாக முன்னெடுக்கும் நோக்கில் பருப்பு மற்றும் டின் மீன்களுக்கான தொகையினை இருப்பில் வைத்திருக்கும் பிரிவொன்று ஸ்தாபிக்கப்பட்டள்ளதுடன்,நாளாந்த இருப்பினை பேண பிரிவொன்றும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது,

இந்த நடவடிக்கை சதொச நிறுவனத்தின் நிதிப்பிரிவின் ஊடாக முன்னெடுக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது,

(MRM.RAASITH)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!