புதிய ஊரடங்கு அமுல் தொடர்பான அறிவித்தல்

(ஏ. அகீல் சிஹாப்)

கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, புத்தளம், அம்பாறை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் கடந்த திங்கட்கிழமை (20) முதல் ஒவ்வொரு நாளும் இரவு 8.00 மணி தொடக்கம் மறுநாள் காலை 5.00 வரை பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு இன்று (24) இரவு 8.00 மணி தொடக்கம் எதிர்வரும் திங்கட்கிழமை (27) அதிகாலை 5.00 மணி வரை நீடிக்கப்படவுள்ளது.

அதன் படி சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்களில் முழுமையான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் எதிர்வரும் திங்கட்கிழமை (27) அதிகாலை 5.00 மணிக்கு ஊடங்கு தளர்த்தப்படவுள்ளது.

ஆனால் தனிமைப்படுத்தல் வலயத்திற்கு உட்படுத்தப்பட்ட பொலிஸ் பிரிவுகளில் மறுஅறிவித்தல் வரை ஊரடங்கு உத்தரவு தொடரவுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!