கொரோனா வைரஸ் தொற்றாளர்களை அனுமதித்த காத்தான்குடி ஆதார வைத்தியசாலைக்கு வென்டிலேட்டர் எனும் மருத்துவ வசதி உண்டு

பாறுக் ஷிஹான்
கொரோனா வைரஸ் தொற்றாளர்களை  அனுமதித்த   காத்தான்குடி ஆதார வைத்தியசாலையை   வென்டிலேட்டர் எனும் மருத்துவ வசதி உபகரணம் இருப்பதனால்  தெரிவு செய்திருக்கலாம்  என என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன் தெரிவித்தார்.

கொரோனா தொற்று தொடர்பில்   தொடர்பாக வெளிவந்த செய்தி  தொடர்பாக வியாழக்கிழமை(23)  கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் தனது கருத்தில்

காத்தான்குடி ஆதார வைத்தியசாலை விடயத்தில் எனக்கு தெரிந்தவரை சில விடயங்களை தெளிவுபடுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றேன் கொரோனா (கொவிட்-19) என்பது தேசிய பிரச்சினையாக ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இந்த சிறிய நாடு இருந்து கொண்டிருக்கின்றது. ஆரம்பத்தில் இது எம்மை தாக்கிய போதும் புற்றுநோய்க்கான வைத்தியசாலையாக காணப்பட்ட ஐ.டி.எச். எனும் வைத்தியசாலையை எமது சுகாதார அமைச்சு இந்த நோய்க்கான சிகிச்சை நிலையமாக அறிவித்திருந்தது அதன்பிறகு நாள் செல்லச் செல்ல தொற்றுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க கொரோனாவிற்கான சிகிச்சை நிலையங்கள் விஸ்தரிக்கப்பட்டது. அந்த அடிப்படையில் மகரகம வைத்தியசாலை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை யாழ் போதனா வைத்தியசாலை இப்படியாக பல வைத்தியசாலைகள் தெரிவுசெய்யப்பட்டு நோயாளிகளின் எண்ணிக்கையை பொருத்தளவில் வைத்தியசாலைகள் விரிவுபடுத்தப்பட்டது. உண்மையில் இந்த விரிவுபடுத்துதல் என்பது பிராந்திய ரீதியாக இமாகாண ரீதியாக அல்ல வைத்தியசாலைகளில் இருக்கின்ற  வசதிகளின் அடிப்படையில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டன.

சுகாதார அமைச்சிலிருந்து மாகாண பணியாளர்களுக்கு, பிராந்திய பணிப்பாளர்களுக்கு அவர்களது வரம்பு எல்லைக்கு உட்பட்ட வைத்தியசாலைகளில் எந்த வைத்தியசாலையை எதிர்காலத்தில் சிகிச்சை நிலையமாக மாற்றியமைக்க முடியும் வினவப்பட்டது அதன் அடிப்படையில் அனைவரும் அதற்கான அறிக்கைகளை சமர்ப்பித்து இருந்தோம்.

கல்முனை பிராந்தியத்தை பொருத்தளவில் நான் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலை, திருக்கோயில் ஆதார வைத்தியசாலையையும்தேவையேற்டின் பொத்துவில் ஆதார வைத்தியசாலை சிகிச்சையை ஆரம்பிக்க முடியும் என அறிக்கையை சமர்ப்பித்தது இருந்தேன். மட்டக்களப்பை பொறுத்தளவில் அந்த பணிப்பாளர் சிகிச்சைக்கு பொருத்தமான மட்டக்களப்பு போதனா வைத்திய சாலைக்கு மிக அருகாமையில் இருக்கின்ற வென்டிலேட்டர் எனும் மருத்துவ வசதி உபகரணம் உள்ள காத்தான்குடி ஆதார வைத்தியசாலையை தெரிவு செய்திருக்கலாம். இந்த வைத்தியசாலை மட்டக்களப்பு பிராந்திய பொறுத்தளவில் மிகவும் பொருத்தமான வைத்தியசாலை எனவே நானும் கருதுகின்றேன்.  ஏனெனில் குறித்த காத்தான்குடி வைத்திய சாலைக்கு அருகில் இன்னுமொரு ஆரையம்பதி ஆதார வைத்தியசாலை உள்ளதால் குறித்த பிரதேசத்தில் வைத்தியசாலை நடவடிக்கையில் முடக்குவதற்கு சந்தர்ப்பங்கள் காணப்படவில்லை. ஆகவே அந்த வைத்தியசாலை எமது தேசிய நோக்குடன் சுகாதார அமைச்சினால் கேட்டப்பட்டிருக்கலாம் ஆகவே நாங்கள் தேசியம் சம்பந்தமாக அறம் சம்பந்தப்பட்ட சுகாதார சேவைகள் மனிதாபிமான அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டிருக்கலாம்.

இந்த முடிவுகள் பிராந்திய ரீதியாகவும் இனம் சார்ந்த ரீதியாகவும் மதம் சார்ந்த முடிவுகளோ வேறுவேறு அரசியல் சார்ந்த முடிவுகளுக்காக எடுப்பதில்லை அந்த வகையில் மட்டக்களப்பு சுகாதார சேவைகள் பணிமனை காத்தான்குடி வைத்தியசாலை தெரிவு செய்யப்பட்டது பொருத்தமான விடயம் என்பது எனது கருத்து.

அம்பாறை மாவட்டத்திலுள்ள ஒலுவில் கடற்படையினரால் நிருவகிக்கப்படுகின்ற   தனிமை படுத்தல் முகாமில 81 நபர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள் .  இதில் ஆரம்பத்தில் ஐந்து பேர் கொவிட்19 தொற்றுள்ளவர்களாக  அடையாளம் காணப்பட்டு சிலாபத்தில் அமைந்துள்ள இரணவில சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். அதனைத்தொடர்ந்து இரண்டாவது படி முறையில் மீதமுள்ள வேர்களை  ஆய்வு செய்தபோது மேலும் மூவர் தொற்று உடையவர்களாக அடையாளப் படுத்தப் பட்டார்கள் அவர்கள் மூவரும் சிலாபத்தில் உள்ள நிலையில் வைத்தியசாலைக்கு அனுமதிக்கபபட்டனர்.

நேற்று மீதியாக இருந்த ஐம்பத்து மூன்று பேருக்கு மாதிரிகளை எடுத்து கண்டிக்கு  அனுப்பி வைத்தோம் அதில் 44 பேர் அது முடிவுகள் எமக்கு கிடைக்கப் பெற்று இருக்கின்றது அந்த 44 பேரின்  முடிவுகள் கொவிட் 19 தொற்றிக்கு ஆளாகவில்லை என எமக்கு கிடைக்கப் பெற்று இருக்கின்றது. மீதமுள்ள  ஒன்பது பேரின்  முடிவுகளை பெறுவதற்காக காத்துக் கொண்டிருக்கின்றோம் அந்த முடிவுகள் கிடைக்கும் பட்சத்தில் உங்களுக்கு அறியத்தருவோம் என குறிப்பிட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!