கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 414 ஆக அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 379 இலிருந்து 414 ஆக உயர்ந்தது.

வெலிசர கடற்படை முகாம் கடற்படைச் சிப்பாய்கள் மேலும் 30 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இராணுவத் தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

நேற்றும் 30 பேர் அடையாளம் காணப்பட்டனர். இந்தநிலையில் இதுவரை மொத்தமாக 60 கடற்படை சிப்பாய்கள் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நாட்டில் இதுவரையில் 409 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!