கொரோனா வைரஸ்: முதல் நோயாளிக்கு இங்கிலாந்தில் பரிசோதனை தடுப்பூசி வழங்கப்பட்டது

கொரோனா வைரஸுக்கான முதல் மனித பரிசோதனை, ஐரோப்பாவில் ஆக்ஸ்போர்டில் இன்று வழங்கப்பட்டது. இரண்டு தன்னார்வலர்களுக்கு வழங்கபட்டது, 800 க்கும் மேற்பட்டவர் ஆய்வுக்கு முன்வந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பாதி பேருக்கு கோவிட் -19 தடுப்பூசியை வழங்கவுள்ளார்கல், மற்றும் மீதி பேருக்கு மூளைக்காச்சல் தடுப்பூசி, கட்டுப்பாட்டு பரிசோதனைக்காக வழங்கப்படவுள்ளது. தன்னார்வலர்கள் எந்த தடுப்பூசி வழங்கப்பட்டது என்பதை அறிய மாட்டார்கள், இருப்பினும் மருத்துவர்கள் அறிந்து இருப்பார்கள்.

மூன்று மாதங்களுக்குள் பரிசோதனை நிலையில் உள்ள இந்த தடுப்பூசி ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை கண்டுபிடித்த குழுவிற்கு பேராசிரியர் சாரா கில்பெர்ட் தலைமை தாங்கினார். இந்த பரிசோதனை தடுப்பூசி வெற்றிகரமாக அமையும் என்று அவருக்கு நம்பிக்கை இருப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த பரிசோதனை தடுப்பூசி வெற்றிகரமாக அமையும் என்று அவருக்கு நம்பிக்கை இருப்பதாகவும், இந்த தடுப்புசி, கொரோனா வைரஸ் நோய்எதிர்ப்பு சக்தியை ஏற்படித்தினால் மட்டுமே அனைவருக்கும் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

(MRM.RAASITH)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!