வெளிமாவட்டங்களில் சிரமப்படும் மக்களின் நலன் கருதி பிரதம மந்திரியுடன் பேசினேன்

பாறுக் ஷிஹான்

வெளிமாவட்டங்களில் சிரமப்படும் மக்களின் நலன் கருதி  பிரதம மந்திரியுடன் தொடர்புகொண்டு மக்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்களை பற்றி கூறி இருக்கின்றேன்  என  தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டுள்ளார்.

பொதுத்தேர்தல் தொடர்பில்  தனது  கட்சி ஆதரவாளர்களுடன்  சந்திப்பில்  ஈடுபட்ட பின்னர்   அம்பாறை மாவட்டம்   கல்முனையில் அமைந்துள்ள  புதன்கிழமை(22)  ஊடக சந்திப்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில்

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ்  பிரச்சினை ஒரு மாவட்டத்திற்கான பிரச்சினை இல்லை முழுநாட்டுக்குமே பிரச்சினை இதனைப் பொருட்படுத்த வேண்டிய முழுப்பொறுப்பும் அரசாங்கத்திடம் இருக்கின்றது .  நிவாரணங்கள் அனைவருக்கும் சென்றடைவதற்கான வழிமுறைகளை அரசாங்கம் ஏற்படுத்த வேண்டும் இதனை தற்போது அரசாங்கம் முன்னெடுத்து இருக்கின்றது சமூர்த்தி பயனாளிகளுக்கான கொடுப்பனவு அதேபோன்று மேலதிக இடர்பாடுகள் ஏற்படும் போதும் அதற்கான தயார் படுத்தலில் அரசாங்கம் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றது.மாவட்டம் விட்டு வேறு மாவட்டத்திற்கு தேவைகளுக்காக சென்றவர்கள் குறித்து அவர்களின் பிரச்சினை குறித்து உரிய அதிகாரிகளுடன் கதைத்துள்ளேன்.மேலும்

நான் பிரதம மந்திரியுடன் தொடர்புகொண்டு மக்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்களை பற்றி கூறி இருக்கின்றேன்  மிக விரைவில் அவ்வாறான பிரச்சினைகள் தீர்த்து தருவார் என நம்புகின்றேன். என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!