கொவிட்- 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு மேலும் 37 மில்லியன் ரூபா அன்பளிப்பு

Ø  வைப்பு மீதி 822 மில்லியனாக அதிகரிப்பு

நிறுவன மற்றும் தனிப்பட்ட அன்பளிப்புகள் மற்றும் நேரடி வைப்புகளுடன் கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தின் மீதி தற்போது 822 மில்லியனாக அதிகரித்துள்ளது.

சிங்கப்பூர் தலைமை சங்கநாயக்க தேரர் சங்கைக்குரிய பெல்லன்வில தம்மரத்ன தேரர் 05மில்லியன் ரூபாவும், மஹரகம சாசன சேவை சங்கம் மற்றும் வொஷிங்டன் பௌத்த விகாரைகளின் 05 மில்லியன் ரூபா, வட அமெரிக்காவின் தலைமை சங்கநாயக்க தேரர் சங்கைக்குரிய மகரகம தம்மசிறி தேரர், பிரான்ஸ் தலைமை சங்கநாயக்க தேரர் சங்கைக்குரிய பரவாஹெர சந்திரரத்ன தேரர் அன்பளிப்பு செய்த ஒரு மில்லியன் ரூபா, அதன் செயலாளர் மகிந்த மடிஹஹேவா, சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனீவா சர்வதேச பௌத்த விகாராதிபதி கலாநிதி தவளம தம்மிக தேரர் மற்றும் விகாராதிபதி ஹல்விடிகல சுஜாத தேரர் ஆகியோர் ஒரு மில்லியன் ரூபா,

கல்கிஸ்ஸ பௌத்த நிறுவனத்தின் தலைவர் கலாநிதி திவியாகஹ யஸஸ்ஸி தேரர் ஒரு மில்லியன் ரூபா, இத்தாலி சிரன்சில் உள்ள சமாதி விகாராதிபதி தொம்பதெனிய நந்தசிறி தேரர் 02லடசம் ரூபாவும் சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.

சீ.ஜே. விக்ரமரத்ன 05மில்லியன் ரூபா, மெரைன் வன் தனியார் நிறுவனம் ஒரு மில்லியன் ரூபா, மரீனா பூட்ஸ் தனியார் நிறுவனம் மற்றும் இலங்கை இருதய சங்கம் தலா 05 மில்லியன் ரூபாவும், வீதிப் போக்குவரத்து சேவை அதிகார சபை 5லட்சம் ரூபா, ஏ. அமரசிங்க ஒரு லட்சம் ரூபா மற்றும் பீ.டீ. தர்மவர்தன ஐம்பதாயிரம் ரூபாவும் நிதியத்திற்கு அன்பளிப்பு செய்யப்பட்டது.

அரச மரக்கூட்டுத்தாபனம் 02மில்லியன் ரூபா, ஆதர் சீ கிலாக் மத்தியநிலையம் 02லட்சம் ரூபா, ஐக்கிய இராச்சியத்தின் ஆனந்தா கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் எட்டு லட்சத்து முப்பதாயிரம் ரூபா, எக்சிண்டா லங்கா தனியார் நிறுவனம் 1.2 மில்லியன் ரூபா, இலங்கை மதிப்பீட்டாளர்களின் நிறுவனம் 05மில்லியன் ரூபா, மேல் மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபை 05 மில்லியன் ரூபா, இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் 10 மில்லியன் ரூபா, இலங்கை சுங்கம் 02மில்லியன் ரூபா, அகில இலங்கை ஆசிரியர் சேவை அதிகாரிகளின் தொழிற் சங்கம் ஒரு மில்லியன் ரூபா, வரையறுக்கப்பட்ட மருந்து விற்பனை சங்கம் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபா, வீதி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சு மற்றும் அதன் கீழ் உள்ள வீதி அபிவிருத்தி அதிகாரசபை 8.6 மில்லியன் ரூபா, சுற்றாடல், வன சீவராசிகள் வள அமைச்சு இரண்டு லட்சத்து இருபத்திமூன்றாயிரம் ரூபா, மத்திய சுற்றாடல் அதிகார சபை ஒரு மில்லியன் ரூபா, புவிச்சரிதவியல் அளவை, சுரங்கப் பணியகம் 02 மில்லியன் ரூபா, சமுத்திர சூழல் பாதுகாப்பு அதிகாரசபை இரண்டு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபா, பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி பொறுப்பு நிதியம் இரண்டு லட்சத்து எழுத்தோராயிரம் ரூபா, சமூக வலுவூட்ல், உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சு 06லட்சம் ரூபா சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!