அசாதாரண சூழலிலும் தகிய்யா பள்ளியில் பிரார்த்தனை!

மிலேச்சத்தனமான தாக்குதல் கடந்த வருடம் இதே நாளில் இடம்பெற்றது.

ஈஸ்டர் ஞாயிறு ஆராதனை தினமான அன்று எமது சகோதர உறவுகள் பலரும் உயிர் நீத்த மற்றும் காயங்கள், அங்கவீனங்களுக்கும் உள்ளாகியிருந்தனர்.

பல உடமைகள் சேதமாகியும் இருந்தன.

இவ்வாறான கொடூர கோரச் சம்பவம் எமது நாட்டை உலுக்கு சோகம் நிறைந்த நாள் கடந்து ஒரு நிறைவாகிறது இன்று.

அந்த துயரில் பங்கு கொளவதற்காக அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் பணிப்பில் சம்மாந்துறை தகிய்யா பள்ளிவாசல் நிர்வாகத்தின் நடாத்திய துஆப் பிரார்த்தனை இன்று தகிய்யா பள்ளிவாசலில் இடம்பெற்றது.

கொரோனா நாட்டில் நிலவியிருக்கின்ற அசாதாரண சூழ்நிலையிலும் கூட சுகாதார சட்டதிட்டங்களுக்கு அமைவாக குறித்த துஆப் பிரார்த்தனை நடைபெற்றது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!