COVID 19 – ஸ்பேயினில் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு!!!

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் காரணமாக ஸ்பெயினில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியுள்ளதாக ஸ்பெயின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இன்றைய தினம் 399 பேர் உயிரிழந்துள்ளதாக ஸ்பெயின் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் ஆயிரத்து 536 பேர் இன்று புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கமைய, கொரோனா தொற்றின் காரணமாக இதுவரை ஸ்பெயினில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக ஸ்பெயின் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் கொரோனா தொற்றின் தாக்கம் காரணமாக அதிகளவில் பாதிக்கப்பட்ட அமெரிக்காவிற்கு அடுத்ததாக ஸ்பெயின் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(MRM.RAASITH)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!