அரசாங்கம் வழங்கும் கொடுப்பனவுகளை மக்கள் சேவைக்கு பயண்படுத்த வேண்டும்- ம.வி.மு. வேட்பாளர் பஹ்த் ஜுனைட்

இன்று நமது தேசத்தில் அரசியல், அர்ப்பணிப்பு, மக்கள் சேவை எல்லாம் தொழிலாக முன்னெடுக்கப்பட்டு வருவதும் தேர்தலை மூலதனமாக பயண்படுத்துவதும் ஆட்சி அதிகாரம் கிடைத்தவுடன் ஊழல் மோசடிகள் மேற்கொண்டு மக்களின் பணத்தில் சுயநலமாக சுக போகம் அனுபவிப்பதும் மலிந்து காணப்படுகிறது. எங்கு ஊழல் ஒழிக்கப்படுகிறதோ, தட்டிக் கேட்க்கப்படுகிறதோ அங்கு மக்கள் சேவை சிறப்பாக நடைபெறும் என்று காத்தான்குடி அன்வர் வட்டாரத்தின் மக்கள் விடுதலை முன்னணி வேட்பாளர் ஜுனைட்.எம்.பஹ்த் தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர் மேலும் கூறுகையில்,

இத்தேர்தல் குட்டித்தேர்தலாக கூறப்பட்டாலும் ஒவ்வொரு இலங்கை பிரஜைகளுக்கும் முக்கியமானதும் தனது வாழ்வை சுகாதாரமானதாகஇ சுகமானதாக, அபிவிருத்தியுள்ளதாக, திருப்திகரமானதாக அமைவதற்கு ஒவ்வொருவரும் சிந்தித்து வாக்குகளை வழங்க வேண்டிய ஒரு தேர்தலாகும்.

உங்கள் வட்டாரத்தில் உள்ள அடிப்படை பிரச்சனைகளை உங்களில் ஒருவனாக இருந்து செயற்படக்கூடிய சமூக சிந்தனை கொண்ட, அமானிதம் பேணக்கூடிய, அல்லாஹ்வுக்குப் பயந்து செயற்படக்கூடிய ஒருவரை உங்களில் இருந்து தெறிவுசெய்யுங்கள்.

இலங்கையின் அரசியல் வரலாற்றில் குட்டித்தேர்தல் என்று அடையாளப்படுத்தப்படும் வட்டார தேர்தல் ஒன்றை நாம் எதிர்நோக்கி இருக்கிறோம்.

இலங்கை அரசியலில் ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்து வருதோடு அரசியலை மக்கள் சேவையாக செய்யவேண்டும் அதற்காக அரசாங்கம் வழங்கும் கொடுப்பனவுகளைக் கூட மக்கள் சேவைக்கு பயண்படுத்த வேண்டும் என்ற கொள்கை கொண்ட இன, மத வேறுபாடு பார்க்காமல் அனைத்து மக்களும் தோழர்கள் என குரல் கொடுத்து அனைத்து மக்களுக்காகவும் உழைக்கும் மக்கள் விடுதலை முன்னணி (JVP) கட்சியில் காத்தான்குடி நகரசபைக்காக நான் களம் இறங்கியுள்ளேன்.

உங்கள் வாக்கு உங்கள் குரல்இஉரிமை அதனை சிந்தித்து உங்கள் பிரச்சினைகளை உங்களில் ஒருவனாக இருந்து உரிய இடத்தில் குரல் கொடுத்து தீர்க்கக் கூடிய ஒருவரை உங்களில் இருந்து தெரிவு செய்யுங்கள் என்பதை மீண்டும் வலியுறுத்திருத்துகிறேன் – என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!