கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஒரு தொகுதி பொருட்கள் கையளிப்பு

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக ஒரு தொகுதி  தொற்றுநீக்கி மருந்து விசிறிகள்,கை ஒலிபெருக்கி மற்றும் துண்டுப்பிரசுரங்கள் ஆகியவை  கையளிக்கப்பட்டது.

திங்கட்கிழமை(20) மாலை 5 மணியளவில் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து சாய்ந்தமருது கிழக்கு நட்புறவு ஒன்றியத்தினால் இப்பொருட்கள் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணனிடம் கையளிக்கப்பட்டது.

தொடர்ந்து குறித்த  தொற்றுநீக்கி மருந்து விசிறிகள்,கை ஒலிபெருக்கி மற்றும் துண்டுப்பிரசுரங்கள் ஆகியன  பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமணை பிரிவில் உள்ள கல்முனை வடக்கு,கல்முனை தெற்கு ,சாய்ந்தமருது மற்றும் காரைதீவு ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களுக்கு கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர்  சகிதம் இணைந்து சாய்ந்தமருது கிழக்கு நட்புற ஒன்றிய அங்கத்தவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.

அத்துடன் கிழக்கு நட்புறவு ஒன்றியத்தினால் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள்   அக்கரைப்பற்று  சுகாதார வைத்திய அதிகாரிடம்    மேற்படி ஒன்றியத்தின் நிர்வாகப் பணிப்பாளர் யூ.எல்.எம்.பைசர்  கிழக்கு நட்புறவு ஒன்றியத்தின் தவிசாளர் யூ.கே.எம்.முஜாஹித்  நிதிப் பணிப்பாளர் ஏ.எம்.ஜிப்ரி உள்ளிட்ட குழுவினரால்  வழங்கப்பட்டன.

குறித்த   கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து பொதுமக்களைப் பாதுகாக்கும் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களை வெளியிட உதவியதற்காக   கல்முனை பிராந்திய தொற்று நோய் தடுப்பு பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி நாகூர் ஆரிப்பிற்கு கிழக்கு நட்புறவு ஒன்றியத்தினால் குறித்த நிகழ்வில் வைத்து  நன்றி தெரிவிக்கப்பட்டது.

மேலும் அரசாங்கத்தினால் கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் அலுவலகத்திற்கு வழங்கப்பட்ட தொற்றுநீக்கி மருந்து விசிறிகள் இஙந்திரங்கள் அக்கரைப்பற்று அட்டாளைச்சேனை சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்களுக்கு இன்று கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர்  கு.சுகுணன் மற்றும் கல்முனை பிராந்திய தொற்று நோய் தடுப்பு பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி நாகூர் ஆரிப் ஆகியோர் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!