அம்பாறை மாவட்டத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் பொது போக்குவரத்து ஆரம்பம்

பாறுக் ஷிஹான்
 
கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அலுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் கிழக்கு மாகாணத்தில் அம்பாறை மாவட்டத்தில் திங்கட்கிழமை(20) தளர்த்தப்பட்டதன் பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.எனினும் பொதுமக்களின் நடமாட்டம் குறைவாகவே காணப்பட்டது.

அம்பாறை  மாவட்டத்தின் கல்முனை,  சவளக்கடை, சம்மாந்துறை,மத்தியமுகாம்,  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இன்று உணவகங்கள், புடவைக்கடைகள்,வீதியோர வியாபாரங்கள் போன்றவைகள் வழமை போன்று இயங்கிய போதிலும் சில இடங்களில் மக்கள் நடமாட்டம் குறைவாகவே காணப்படுகிறது.

மேலும் அரச தனியார் போக்குவரத்து  குறிப்பிட்ட தூரத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ள நிலையிலும் மட்டுப்படுத்த மட்டில் இடம்பெற்றது.அதில் பயணம் செய்கின்ற பொதுமக்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளதை அவதானிக்க முடிகிறது.இது தவிர அரச தனியார் வங்கிகள் திறந்துள்ளதுடன் மக்கள் ஆர்வத்துடன் பொருட்கொள்வனவில் ஈடுபட்டனர்.

கடந்த தினங்களுக்கு முன்னர் இம்மாவட்டத்தில்  ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட போது அதிகளவிலான பொதுமக்கள் முண்டியடித்துக் கொண்டு பொருட் கொள்வனவில் ஈடுபட்டு வந்தததை அவதானிக்க முடிந்தது. ஆனால் இன்றைய தினம்  இம்மாவட்டத்தின் அக்கரைப்பற்று பொலிஸ்  பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் மாத்திரம் ஊரடங்கு தளர்வு மேற்கொள்ளப்படவில்லை.அத்துடன் சில சமூக ஊடகங்களில் எதிர்வரும் புதன்கிழமை (22) அம்பாறை மாவட்டத்தில் ஊரடங்கு தளர்த்தப்படும் என வெளிவந்த செய்திகளினால் மக்கள் பெரும் குழப்பநிலைக்கு சென்றுள்ளதை மக்கள் வரவு குறைவாக உள்ள காரணங்களில் அறிய முடிந்தது.

இருந்த போதிலும் நீதிமன்றங்கள் வழமை போன்று இயங்குகிறது. பெரிய நீலாவணை, ஓந்தாச்சிமடம், காரைதீவு ,சாய்ந்தமருது, மாளிகைக்காடு,  நிந்தவூர்,அட்டப்பளம், சம்மாந்துறை மாவடிப்பள்ளி ,சவளக்கடை, மத்தியமுகாம்,உள்ளிட்ட   முக்கிய இடங்களில் பிரதேசங்களில் மக்களின் நடமாட்டம் குறைவாக காணப்பட்டன.

அத்தோடு பொதுமக்கள் ஒன்றுகூடும் இடங்களுக்குச் சென்று பொலிஸார் கொரோனா வைரஸ் தொடர்பான அறிவுறுத்தல்களை வழங்கினர்.

எனினும் கல்முனை பொது சந்தை  உட்பட அதனை சூழ உள்ள  பாதையோரங்களில் மரக்கறி வியாபாரம் களைகட்டியது.  மேலும்   வியாபார நிலையங்கள் சுப்பர்மார்க்கெட்டுகள் பாமசிகள்   எரிபொருள் நிலையங்கள் வழமை போன்று திறக்கபட்டடு வியாபாரம் இடம்பெற்றது.

எனினும் சில இடங்களில்  பொதுமக்களின் வருகை இன்மையால் வியாபார நடவடிக்கைகளும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!