தெருவோரத்தில் யாசகம் செய்தவர்களுக்கு உதவி-கல்முனை பொலிஸாரின் முன்மாதிரி

பாறுக் ஷிஹான்

கல்முனையில் தெருவோரத்தில் யாசகம் செய்தவர்களுக்கு உதவி பொலிஸ் அத்தியட்சகர் புத்திக்க ஜெயசுந்தர நெறிப்படுத்தலில் உணவுப்பொதி வழங்கி வைக்கப்பட்டது.கொரோணா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பொலிஸ் பிராந்தியத்திற்குட்பட்ட பிரதான வீதிகள் பொது இடங்களில் யாசகர்கள் உணவின்றி சிரமப்பட்டு வருகின்றார்கள்.

இதனடிப்படையில் கடந்த சில தினங்களாக தொடரச்சியாக கல்முனை பொலிஸ்  நிலைய பொறுப்பதிகாரி சுஜீத் பிரியந்தவின் வழிநடத்தலில் குறித்த உணவு பொதிகள் வழங்கப்பட்டிருந்தது.அதன் தொடர்ச்சியாக ஞாயிற்றுக்கிழமை(19) மதியம்  பொலிஸ் நிலைய   நிருவாக பிரிவு பொறுப்பதிகாரி நுவரபக்க்ஷ விஜயரத்ன தலைமையிலான பொலிஸ் குழுவினர் சமைத்த உணவுகளை வழங்கி வைத்தனர்.

அத்துடன் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்ட காலங்களில் கூட கல்முனை பொலிஸ் நிலையத்தினால் வறிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!