சம்மாந்துறை வர்த்தக சம்மேளனத்தினால் 15 நாட்கள் தொடர்ச்சியாக வீட்டுக்கு வீடு பாண் வழங்கும் நிகழ்வு

தனவந்தர்களின் உதவியுடன் சம்மாந்துறை வர்த்தக சம்மேளனத்தினால் 15 நாட்கள் தொடர்ச்சியாக வீட்டுக்கு வீடு பாண் வழங்கும் நிகழ்வு நடைபெற்று கொண்டு இருக்கின்றது.

இன்று (19) இன் நிகழ்வு புஸ்றா பள்ளி மகல்லா,கோரக்கோவில்,உதயபுரம் பிரதேசங்களில் 1000 பாண் வீட்டுட்க்கு வீடு சென்று பிரதேசங்களில் உள்ள அனைத்து மக்களுக்கும் கையளிக்கப்பட்டது.

இன் நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனீபா சம்மாந்துறை இராணுவ கட்டளை தளபதி நவரத்தின அவர்களும் சம்மாந்துறை வர்த்தக சம்மேளன உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

சம்மாந்துறை வர்த்தக சம்மேளனம் இதுவரைக்கு 6000 பாண் மக்களுக்கு வழங்கியமை குறிப்பிடத்தக்கது. இன் நிகழ்வில் 1000 ரூபாய் பொதிகள் 50 நபர்களுக்கு வழங்கி வைக்கப்ட்டது.

(Mohammed Naasim)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!