சிங்கப்பூர் நன்கொடையாளர்களினால் கொரோனா ஒழிப்புக்கு சுகாதார உபகரணங்கள் அன்பளிப்பு

சிங்கப்பூர் மகாகருணா பௌத்த சங்கத்தின் தலைவரும் லங்காராமாதிபதியுமான சங்கைக்குரிய கே.குணரத்ன தேரர், இலங்கை உயர் ஸ்தானிகர் சஷிகலா பிரேமவர்த்தன மற்றும் Humanity Matters சங்கத்தின் தலைவர் Ong Keng Yong கொவிட் 19 வைரஸ் ஒழிப்புக்கு அன்பளிப்பு செய்த சுகாதார உபகரணங்கள் தொகுதி இன்று (16) ஜனாதிபதி அலுவலகத்திற்கு கையளிக்கப்பட்டது.

தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் வெப்பமானி போன்ற உபகரணங்களைக் கொண்ட இதன் பெறுமதி 10 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாகும்.

சர்வதேச விவாகரங்கள் தொடர்பான ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் அட்மிரல் ஜயனாத் கொலம்பகே, ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் ரோஹண அபேவர்த்தன ஆகியோர் இந்த உபகரண தொகுதியினை பொறுப்பேற்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!