கொரோனா வைரஸை கட்டுப்படுத்த நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்ககூடிய ஆயுர்வேத மருந்துகள் கையளிப்பு

பாறுக் ஷிஹான்

கொரோனா வைரஸை கட்டுப்படுத்தற்காகவும்   நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்ககூடிய வகையில்  ஒரு தொகுதி  ஆயுர்வேத மருந்து வகைகள் கல்முனையில் புதன்கிழமை(14) மதியம்  வழங்கி வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் அனுசரணையுடன் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை இணைந்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய இம்முனோ வூஸ்டர்(IMMUNO BOOSTER) எனும் ஆயுர்வேத மருந்தினை கல்முனை பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு   கல்முனை பிரதேச செயலாளர்   எம்.எம் நஸீர் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில்  வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார,சுதேச மருத்துவ,நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு,சமூக நலன்புரிச் சேவைகள்,  அமைச்சின் செயலாளர் ஏ.எச்.எம்.அன்சார், கலந்து கொண்டதுடன் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர்   கு.சுகுணன் மற்றும் கல்முனை பிராந்திய சுதேச வைத்திய துறைக்கான இணைப்பாளர் டாக்டர் எம்.ஏ நபீல், கணக்காளர் எம்.பாரிஸ், கல்முனை பிராந்திய ஆயுர்வேத வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர் எம்.வை இஸ்சாக்,உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர், தலைமைப்பீட சமூர்த்தி முகாமையாளர் ஏ..சி ஏ. நஜீம், நிர்வாக கிராம சேவை உத்தியோகத்தர் யூ.எல்.பதியுத்தீன் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!