ஜனாஸா நல்லடக்க விவகாரம் : மொட்டு முஸ்லிம் பிரமுகர்களின் கருத்துக்கள் அடியோடு நிராகரிப்பு !

ஏ.எச்.எம்.பூமுதீன்

கொரோனா தொற்றால் மரணிக்கும் முஸ்லிம் ஜனாஸாக்களை எரிக்காமல் , நல்லடக்கம் செயவது தொடர்பில் நேற்று முன்தினமும் (12) நேற்றும் (13) ஆளும் தரப்பு முஸ்லிம் பிரமுகர்கள் எடுத்த முயற்சிகள் அசட்டைத்தனமாக நிராகரிக்கப்பட்டுள்ளன.

அம்பாந்தோட்டையில் பிரதமருக்கும் − ஆளும் கட்சிக்கு மிக நெருக்கமான முஸ்லிம் பிரமுகர்களுக்குமான சந்திப்பு நேற்று முன்தினம் இடம்பெற்றது..

ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யும் விவகாரத்தில் என்னால் தனித்து முடிவெடுக்க முடியாது ..சுகாதாரத் துறையினரின் பரிந்துரைப்படியே என்னால் செயற்பட முடியும் என்றார் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ.

நாளை − ( நேற்று ) சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் அணில் ஜயசிங்க மற்றும் சுகாதார அமைச்சர் பவித்ரா வண்ணியாரச்சி ஆகியோரைச் சந்திக்க ஏற்பாடு செய்து தருகின்றேன். அவர்களுடன் பேசிப்பாருங்கள் எனக் கூறிய பிரதமர் , நேற்று அச் சந்திப்புக்கான ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார்.

( குறிப்பு :− இந்தச் சந்திப்பு அம்பாந்தோட்டையில் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் போது , கொரோனாவால் மரணிப்பவர்களை எரிப்பது என்ற வர்த்தமாணியில் அமைச்சர் பவித்ரா கையொப்பமிட்டுக் கொண்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.
பேச்சு நிறைவடைந்து சில நிமிட நேரங்களின் பின்னர் , குறித்த வர்த்தமானி வெளியானது )

அதன்படி, நேற்று 13 ஆம் திகதி சுகாதார சேவைப் பணிப்பாளருக்கும் − ஆளும் தரப்பான மொட்டு முஸ்லிம் பிரமுகர்களுக்குமான சந்திப்பு நடைபெற்றது..

ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்யத்தான் வேண்டும் என்ற மொட்டு முஸ்லிம் பிரமுகர்களுடன்− நாட்டிலுள்ள சிங்கள புத்திஜீவிகள் , வைத்தியர்கள் என சிலரும் கலந்து கொண்டனர்.

முஸ்லிம் ஜனாஸாக்களை ஏன் எரிக்கக் கூடாது , நல்லடக்கத்தால் சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது , தொற்று ஏற்படாது போன்ற காரணிகளை விஞ்ஞான ரீதியாக விளக்கினர் சிங்கள சமூக பேராசிரியர்கள்.

முஸ்லிம் பிரமுகர்கள் , இஸ்லாமிய கலாச்சாரம் மற்றும் இஸ்லாம் என்ற வட்டத்துக்குள் நின்று ஜனாஸாக்களை எரிக்க வேண்டாம் என்று வாதாடினர்.

ஆனால். சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகம் , இவர்களது எந்தவொரு கருத்துக்களையும் உள்வாங்கிக் கொள்ளவே இல்லையாம்..

” கதைப்பதை அவசரமாகக் கதையுங்கள். எனக்கு வேலை இருக்கிறது” என்பதைப் போலத்தானாம் பணிப்பாளர் அவசரம் காட்டினாராம் என்கிறார் இச் சந்திப்பில் கலந்து கொண்ட மொட்டு பிரமுகர்..

இது தொடர்பில் கருத்து தெரிவித்த அவர், கொரோனாவால் மரணிக்கும் முஸ்லிம் ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய முயற்சிப்பது இனி ஒருபோதும் சாத்தியமில்லை ; அது ஒரு வீண் முயற்சி என்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!