ஜனாதிபதியின் அனுதாப செய்தி !

கொழும்பு மறைமாவட்டத்தின் 7ஆவது பேராயர் பேரருட்திரு கலாநிதி நிகலஸ் 
மார்க்கஸ் பெர்னாண்டோ ஆண்டகை நித்திய இளைப்பாறுதல் அடைந்த செய்தியை அறிந்து 
மிகவும் கவலையடைகின்றேன். 
தெய்வத்திற்காகவும் இலங்கை வாழ் கத்தோலிக்க மக்களின் சமய, சமூக 
நன்மைக்காகவும் தனது வாழ்வை அர்ப்பணித்த உன்னதமானவர்களில் ஒருவராக நிகலஸ் 
மார்க்கஸ் பெர்னாண்டோ ஆண்டகையின் பெயரும் என்றும் நினைவுகூரப்படும். 
இங்கிலாந்து, இத்தாலி உள்ளிட்ட பல நாடுகளில் உயர் சமய கல்வி நிறுவனங்கள் 
மற்றும் பல்கலைக்கழகங்களில் இறையியல் மற்றும் தத்துவத் துறையில் பட்டம் பெற்றுள்ள 
அவர் தனது வாழ்வை இறைவனின் விருப்பத்திற்காக அர்ப்பணித்திருந்தார். கத்தோலிக்க 
மக்களிடத்தில் மட்டுமன்றி நாட்டிலுள்ள அனைத்து சமயத்தவர்களினதும் கௌரவத்தைப் 
பெற்றிருந்த நிகலஸ் பெர்னாண்டோ ஆண்டகை இள வயதிலேயே கொழும்பு மறை 
மாவட்டத்தின் 7ஆவது பேராயர் பதவிக்கு தெரிவுசெய்யப்பட்டு சுமார் இருபத்தைந்து 
வருடங்கள் அப்பதவியை வகித்தார். 
நிகலஸ் மார்க்கஸ் பெர்னாண்டோ ஆண்டகை ஒரு சிறந்த நிர்வாகி. அதேபோன்று 
ஒழுங்கமைப்பு மற்றும் வழிப்படுத்தல் தொடர்பில் கத்தோலிக்க திருச்சபையின் பாராட்டைப் 
பெற்ற பேராயர் ஆவார். புனித பாப்பரசர் இரண்டாம் ஜோன் போல் அவர்கள் 1995 ஜனவரி மாதம் 
இலங்கைக்கு வருகைதந்த போது சமய மற்றும் ஒழுங்கமைப்பு நெறிப்படுத்தல் பணிகள் 
நிகலஸ் மார்க்கஸ் பெர்னாண்டோ ஆண்டகையின் முழுமையான கண்காணிப்பிலேயே 
இடம்பெற்றது. 
பௌத்த பிக்;குகளுடனும் ஏனைய சமயத் தலைவர்களுடனும் மிக நெருங்கிப் பழகி 
தேசிய சமய எழுச்சி மற்றும் சமய நல்லிணக்கத்தை பேராயர் அவர்கள் அர்த்தப்படுத்தினார். 
நாம் அவரது அந்தப் பணிகளை அனைத்து மக்களினதும் கௌரவத்தையும் நன்றியையும் 
தெரிவித்து நினைவுபடுத்துகின்றோம். கலாநிதி நிகலஸ் மார்க்கஸ் பெர்னாண்டோ 
ஆண்டகையின் வாழ்க்கை எளிமையும் கருணையும் பொதிந்ததாக இருந்ததை நாம் 
கண்டுள்ளோம். 
நித்திய இளைப்பாறுதல் அடைந்த கொழும்பு மறைமாவட்டத்தின் 7ஆவது பேராயர் 
பேரருட்திரு கலாநிதி நிகலஸ் மார்க்கஸ் பெர்னாண்டோ ஆண்டகைக்கு இயேசுவிடம் நித்திய 
ஜீவன் கிடைக்க நான் பிரார்த்திக்கின்றேன். 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

error: Content is protected !!